பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் திருச்சி விமான நிலையத்துக்கு தேசிய அளவில் 6-வது இடம்: 10-வது இடத்தில் கோவை ; 15-வது இடத்தில் மதுரை

By அ.வேலுச்சாமி

பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் திருச்சி விமான நிலையம் தேசிய அளவில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. 10-வது இடத்தை கோவை, 15-வது இடத்தை மதுரை விமான நிலையங்கள் பெற்றுள்ளன.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங் களில் உள்ள விமான நிலையங் கள் தவிர, நாடு முழுவதும் 53 இடங்களில் இரண்டாம் நிலை விமான நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பயணி களுக்கு அளிக்கப்படும் சேவை களின் தரம், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து, இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் சார்பில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சர்வே நடத்தப்படும்.

அப்போது, விமான நிலைய அதிகாரிகள், சிஐஎஸ்எப் வீரர்கள், சுங்கம் மற்றும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பயணிகளிடம் நடந்துகொள்ளும் முறை, விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்பு, பார்க்கிங் வசதி, டிராலி வசதி, காத்திருப்பு நேரம், உணவக வசதி, வங்கிகள், ஏடிஎம் மற்றும் பணப் பரிமாற்ற மையங்கள், ஷாப்பிங் வசதி, இலவச வை-ஃபை வசதி, கழிப்பிட வசதி, சுகாதாரம், அவசர ஊர்தி வசதி, விமானத்தில் கொண்டுவரும் பொருட்களை ஒப்படைக்கும் வேகம் உட்பட 33 வகையான கேள்விகளுக்கு, பயணிகளிடம் இருந்து பதில் பெறப்படும். இதை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அளவில் சிறப்பான சேவை செய்யும் விமான நிலையங்கள் குறித்த தரநிலைப் பட்டியல் வெளியிடப்படும்.

இதன்படி, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத் துக்கான சர்வே முடிவுகளை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், 5-க்கு 4.85 புள்ளிகளைப் பெற்று, சண்டிகர் விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ராய்ப்பூர் 2-ம் இடத்திலும், உதய்ப்பூர் 3-ம் இடத்திலும் உள்ளன.

திருச்சி விமான நிலையம் 4.66 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், கோவை விமான நிலையம் 10-வது இடத்தையும், மதுரை விமான நிலையம் 15-வது இடத்தையும், தூத்துக்குடி விமான நிலையம் 36-வது இடத்தையும் பெற்றுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு இதே காலகட்டத்துக்கான (ஜனவரி-ஜூன்) சர்வேயில் 4.63 புள்ளிகள் பெற்று 13-வது இடத்தில் இருந்த திருச்சி விமான நிலையம், தற் போது 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் சு.குண சேகரன் கூறும்போது, “இந்தியா வில் அதிவேகமாக வளர்ச்சியடை யும் விமான நிலையங்களில் முக்கியமானதாக திருச்சி விளங்கு கிறது. எனவே, இங்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர, இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறது. இங்கு, பயணிகளுக்கு இலவச வை-ஃபை வசதி அளிக்கப்படுகிறது. மிக விரைவில் கார்கோ கூரியர் வசதியும் தொடங்கப்பட உள்ளது. பயணிகளின் தேவைகளைக் கேட்டு, அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதால் தர வரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம். வரும் ஆண்டுகளில் இதைவிட சிறப்பான நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்