நாணயங்களை சேகரிக்கும் திண்டுக்கல் ஆசிரியர்: 40 ஆண்டு கடந்தும் தொடரும் தேடல்

By பி.டி.ரவிச்சந்திரன்

கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த நல்லாசிரியர் அ. டேவிட் ஜெயக்குமார் (57).

திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிபவர் அ. டேவிட் ஜெயக்குமார் (57). 1975-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் படிக்கும்போது நாணய பாடம் சம்பந்தமாக, பல நாணயங்களை சேகரித்தார். இதை ஏன் பொழுது போக்காகச் செய்யக் கூடாது என்று எண்ணி படிக்கும்போதே பல்வேறு நாணயங்கள், வெளிநாட்டு கரன்சி களை சேகரிக்கத் தொடங்கினார். முதலில் ஒரு அமெரிக்க நாணயம் கிடைத்தது. இதை கணவாய்பட்டியில் காந்திய ஆசிரமம் நடத்திய கைத்தான்ஜி என்ற வெளிநாட்டுக்காரரிடம் அன் பளிப்பாக பெற்றார்.

அன்று தொடங்கிய நாணயச் சேகரிப்பு பழக்கம் 40 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. தெரிந்த வர்கள் யார் வெளிநாடு சென் றாலும் அவர்களிடம் அந்த நாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வாங்கிவரும்படி கேட்டுக் கொள்வார். இவரது பழக்கத்தை அறிந்த நண்பர்கள் இவர் கேட்காமலேயே வெளிநாட்டு நோட்டுகளை தரத் தொடங்கினர். பலரிடம் அதிக தொகை கொடுத் தும் அரிதான வெளிநாட்டு நோட் டுகளை பெற்றுள்ளார்.

இவரிடம் 275 அயல்நாடுகளின் நாணயங்கள், 120 நாடுகளின் (ரூபாய்) நோட்டுகள் தற்போது உள்ளன. 1805-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட 60 வெள்ளி நாணய ங்களை சேகரித்து வைத்துள்ளார். பல்வேறு சிகை அலங்காரத்தில் ராணி விக்டோரியா உருவப் படம் கொண்ட நாணயங்கள், மன்னர்கள் எட்வர்டு, ஐந்தாம் ஜார்ஜ், கிழக்கு இந்திய கம்பெனி நாணயங்கள், ராணி எலிசபெத், மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் பொறித்த நாணயங்களும் வைத்து ள்ளார். 1/12 அணாவில் (தம்படி) இருந்து ஒரு அணா, 2 அணா, ஓட்டைக் காலணா,

வெளிநாட்டு நோட்டுகளில் ஆங்கில எழுத்தில் ‘ஏ’ ல் தொடங்கி நாடுகளின் நோட்டுகளையும் வரிசைப்படுத்தி வைத்துள்ளார்.

புருனே, பூடான் மன்னர், ஈரான் அதிபரின் உருவம் அச்சிடப்பட்ட நோட்டுகள், இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபட்ச படம் அச்சிட்ட ரூபாய், சார்லஸ், டயானா திருமண த்தின்போது வெளியிட்ட அவர்கள் உருவம் பொறித்த நாண யங்கள் இவரது சேகரிப்பில் முக்கி யமானவை.

இதுபற்றி அ. டேவிட்ஜெயக்கு மார் கூறியதாவது:

ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் அனைத்தும் சேகரித்துள்ளேன். 20 ஆல்ப ங்களாக நாணயங்களை தொகுத்து வைத்து ள்ளேன். இந்திய நாணயங்களில் ஒரு பைசாவில் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை வைத்துள்ளேன். 5 ரூபாய் நாணயத்தில் மட்டும் 60 வகைகள் உள்ளன. நாண யங்களைச் சேகரிப்பதின் மூலம் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பல நாட்டு மொழிகளை அறி யலாம். அரசாங்கம், வரலாறு குறித்தும் தெரிந்து கொள்ளலாம். தலைவர்களின் உருவம் பொறித்த நாணயங்கள் மூலம் அவர்களின் வரலாறுகளை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்படும்.

வெளிநாட்டு கரன்சிகளில் அவர்களின் காலச்சாரமும் படங்களுடன் வெளிப்படுத் தப்பட்டுள்ளது என்றார்.

ரூ. 6 லட்சம் மதிப்பு

அவர் மேலும் கூறுகையில் உள்நாடு, வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என இதுவரை சேகரித்தவற்றின் தற்போதைய மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும். பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும், பெரும்பாலான நேரம் வீட்டில் தனி அறையில் உள்ள நாணயங்களை தூய்மைப்படுத்துவது, அவற்றை வகைப்படுத்துவது என பெரும்பாலான நேரத்தை செலவிடுவேன். இதுதான் எனது பொழுதுபோக்கு. குடும்பத்தினரும் ஒத்துழைப்பு தருவதால் நாணய சேகரிப்பில் ஆர்வமாக ஈடுபட முடிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்