கண்ணா லட்டு தின்ன ஆசையா…மாணவர்களுக்கு தினமும் தினை லட்டு

அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தினை லட்டு வழங்க தமிழக அரசு ரூ1.29 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதையடுத்து, பள்ளிகளில் தினை லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரியலூர் ஆட்சியர் சரவணவேல்ராஜ் தெரிவித்திருப்பது:

தமிழக அரசின் முன்னோடித் திட்டமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் தினை மாவில் செய்த லட்டு வழங்கும் திட்டம் நவம்பர் 8-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்திற்கு மட்டுமேயான இத்திட்டத்திற்காக, அரசு சார்பில் ரூ1.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

40 ஆயிரத்து 680 மாணவர் களுக்கு பயன ளிக்கும் வகையில் 5 மாதங்களுக்கு இத்திட்டம் நடப்பில் இருக்கும். தினமும் இருவேளை என வேளைக்கு 25 கிராம் எடையுள்ள தினைமாவு லட்டு வழங்கப்படுகிறது.

வறுத்த கொண்டைக்கடலை, கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், சாமை உள்ளிட்ட சிறுதானியங்களுடன் சுவைக் காக வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த லட்டு தயாரிப்பதற்காக சத்துணவு பணி யாளர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் இந்த மாவட்டத்தில் பயன்பெறுவது போல, மற்ற மாவட்டங்களிலும் அடுத்தக்கட்டமாக தினை லட்டும் வழங்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என அதி காரிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE