முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கோடநாடு எஸ்டேட் பங்க ளாவில் நடந்த கொள்ளை முயற்சி யின்போது, காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற் றொரு காவலாளி வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓய்வு எடுப்பதற்காக பயன்படுத்தி வந்தார். இந்த பங்களாவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காவலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவ லாளி அரிவாளால் வெட்டப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் எஸ்டேட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, 10-ம் எண் நுழைவு வாயிலில் ஓம் பகதூர் (50) என்ற காவலாளி, அங்குள்ள மரத்தில் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. மயக்க நிலை யில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் (37) அரிவாள் வெட்டுக் காயங்களுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து முரளி ரம்பா கூறியதாவது: கோடநாடு எஸ்டேட் 10-ம் எண் நுழைவுவாயிலில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் (50) என்ற காவலா ளியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
பங்களாவில் உள்ள ஓர் அறை யின் ஜன்னல் உடைக்கப்பட்டுள் ளது. ஆனால், எந்தப் பொருளும் திருடு போனதாகத் தெரியவில்லை.
மற்ற காவலாளிகள் அளித்த தகவலின்படி உடனடியாக போலீஸ் படை அனுப்பிவைக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை நடந்து வருகிறது. நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமிராக் கள் இல்லை என்றார்.
காவலாளிகள் இருவரும் நேபா ளத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர்.
சம்பவம் அறிந்து, கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலா ளர்கள் அதிர்ச்சி அடைந்து, நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். கொலை நடந்த பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டது. பிற தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பின்னர், எஸ்டேட் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேற்கு சரக ஐ.ஜி., ஏ.பாரி மற்றும் டி.ஐ.ஜி., தீபக் ஏ.தோமர் ஆகியோர் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்தனர்.
மயக்க மருந்து தெளித்து கொலை
காவலாளிகள் மீது மயக்க மருந்து தெளித்து 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்க முயற் சித்துள்ளது தெரியவந்துள்ளது. உயிர்தப்பிய கிருஷ்ண பகதூரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற் றுள்ளனர்.
போலீஸார் கூறும்போது, ‘நுழைவு வாயில் 10-ல் ஓம் பகதூர் பணியில் இருந்தபோது, நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் இரு வாக னங்களில் 10 பேர் வந்து வாயிலை திறக்கக் கூறியுள்ளனர். அவர் மறுக்கவே, உள்ளே நுழைந்து முதலில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்துள்ளனர். பின்னர், அவரை தாக்கி கை, கால்களை கட்டி அரு கில் இருந்த மரத்தில் கட்டி வைத் துள்ளனர்.
சப்தம் கேட்டு அங்கு வந்த கிருஷ்ண பகதூருக்கும் மயக்க ஸ்பிரே அடித்து, தாக்கியுள்ளனர். கிருஷ்ண பகதூர் கீழே விழுந் துள்ளார். உள்ளே நுழைந்தவர்கள் பங்களா கண்ணாடிகளை உடைத்து நோட்டமிட்டுள்ளனர்.
அங்கிருந்து வெளியேறும் போது, கிருஷ்ண பகதூரின் கை களில் கத்தியால் வெட்டியுள்ளனர். அவர் அசையாமல் படுத்துக் கிடக் கவே, இறந்து விட்டதாக எண்ணி அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மயக்கம் தெளிந்த பின்னர் கிருஷ்ண பகதூர் பிற தொழி லாளர்கள் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
2 பேரிடம் விசாரணை
ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறில் காவலாளி கொல்லப் பட்டிருக்கலாம் என்ற கோணத் தில் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. எஸ்டேட்டில் ஓட்டுந ராக பணிபுரிந்த திவாகர் மற்றும் சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரிடம் தற்போது போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் பாதுகாப்பு
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இருந்தபோது கோடநாடு எஸ்டேட் பகுதி உயர் பாதுகாப் புப் பகுதியாக இருந்தது. அப் பகுதிக்குள் செல்வதற்கு முன்னர், ஆங்காங்கே இருக்கும் சோதனைச் சாவடிகளை கடந்தே செல்ல வேண் டும்.
கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு கடந்த 4 மாதங்களாக அங்கே போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட் டது. கடைசியாக கடந்த 2015 நவம் பர் மாதம் ஜெயலலிதா கோடநாடு வந்து சென்றார் என்பது குறிப் பிடத்தக்கது.
சொத்து ஆவணங்கள் கொள்ளை?
கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்து, சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், பங்களாவில் எந்த ஆவணங்களும் இல்லை என எஸ்டேட் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோதே, பங்களாவில் இருந்து அனைத்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. தற்போது கோடநாட்டில் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை தவிர வேறு ஏதுமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
போலீஸார் கூறும்போது, ‘சொத்துக் குவிப்பு வழக்கில், கோடநாடு எஸ்டேட் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை’ என்றனர்.
கிருஷ்ண பகதூர்
படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago