சூடுபிடிக்கும் கிரானைட் வழக்குகள்: குற்றப் பத்திரிகை தயாரிக்கும் பணி தீவிரம்

By கி.மகாராஜன்

கிரானைட் முறைகேடு வழக்குகளில் எஞ்சிய 61 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. வாரம் 4 வழக்குகள் வீதம் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, உசிலம் பட்டி காவல் நிலையங்களில் பி.ஆர். பழனிச்சாமி உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது 2012 முதல் 2015 வரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட் டன. இந்த வழக்குகள் மேலூர், உசிலம்பட்டி, மதுரை நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மட்டும் 86 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த 98 வழக்குகளில் இதுவரை 29 வழக்குகளில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் திருந்த நிலையில், பெரும்பாலான கிரானைட் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றக் கிளை தடை விதித் தது. இதனால் எஞ்சிய கிரானைட் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தடையை விலக்கக்கோரி, அரசு தரப்பில் தாக்கலான மனுவை ஏற்று பல வழக்குகளில் தடை நீக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பி.ஆர்.பழனிச்சாமி, பி.கே.செல்வராஜ், ஆன்ந்த் உள்ளிட்டோர் மீதான கீழ வளவு, மேலூர், கொட்டாம்பட்டி காவல் நிலைய வழக்குகளில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தி லும், பி.ஆர்.பழனிச்சாமிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்திலும் சுமார் 2500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த வாரம் கீழவளவு, ஒத்தக் கடை, மேலூர் காவல் நிலையங் களில் பி.ஆர். பழனிச்சாமி, பி.கே.செல்வராஜ், கே.ஜி. சந்திரன் மற்றும் பல்லவா கிரானைட் நிறுவனம் மீதான 4 வழக்குகளில் மேலூர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் 1292 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப் பத்திரிகைகளில் பொதுப்பணித்துறை கண்மாய், அரசு பாறை புறம்போக்கு, தரிசு புறம்போக்கில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத் தது மற்றும் பெரியாறு பாசனக் கால்வாய் பிரிவு ஓடையை சேதப் படுத்தியது உட்பட அரசுக்கு ரூ.748 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை 37 வழக்குகளில் குற் றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. எஞ்சிய 61 வழக்குகளி லும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் அடுத்தடுத்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை அரசு வழக்கறிஞர் ஷீலா, டிஎஸ்பிக்கள் தங்கவேல், குமார வேல், ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங் ஆகியோர் இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

வாரம் 4 வழக்குகள் வீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஓரிரு மாதங்களுக்குள் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துரிதப்படுத்த அரசு தரப்பு முடிவு செய்துள்ளது. அரசு தரப்பின் தீவிரம் காரணமாக கிரானைட் முறைகேடு வழக்குகள் சூடுபிடித்துள்ளன.

தடையை நீக்க நடவடிக்கை

கிரானைட் முறைகேடு தொடர்பான 98 வழக்குகளில் 23 வழக்குகளில் கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் விதித்த தடை இன்னும் அமலில் உள்ளது. இதனால் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த 23 வழக்குகளில் தடையை நீக்க உயர் நீதிமன்ற கிளையில் விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் ஷீலா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்