செஸ் போட்டியில் கலக்கும் 14 வயது சிறுவன் தமிழக மண்ணில் உருவாகும் கிராண்ட்மாஸ்டர்

By செய்திப்பிரிவு

சென்னையில் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. பெரும் வரவேற்பு, எதிர்பார்ப்புக்கு இடையில் மாபெரும் திருவிழா போல நடந்த இந்த சர்வதேசப் போட்டியைக் கொண்டாடும் விதமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் சென்னை கிராண்ட்மாஸ்டர் இன்டர்நேஷனல் ஓபன் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியின் 11-வது மற்றும் கடைசிச் சுற்று கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது.

இறுதிச்சுற்றுகளின் முடிவில் வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ. 2 லட்சம் ரொக்கம், கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது.

யார் இந்த அரவிந்த் சிதம்பரம்?

சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம் யார்? பிரபல செஸ் வீரரின் வாரிசா? லட்சக்கணக்கில் பயிற்சிக் கட்டணம் செலுத்தி பிரபல நிபுணர்களிடம் சிறப்புப் பயிற்சிகள் பெறும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? அல்ல.. மதுரையைச் சேர்ந்த 14 வயதே நிரம்பிய சிறுவன் தான் வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம்.

உலக இளைஞர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். 11, 13, 19 வயதுக்கு உட் பட்டோருக்கான தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தையும் வென்றிருக் கிறார்.

கிராண்ட்மாஸ்டர் இன்டர் நேஷனல் ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அரவிந்த் சிதம்பரம்.

அசாத்திய திறமை

இளம் சாதனையாளர் அரவிந்த் சிதம்பரம் பற்றி அவரது பயிற்சியா ளர் ஆர்.பி.ரமேஷ் கூறியதாவது:

அசாத்திய திறமை கொண்டவன் அரவிந்த். ஒழுங்காக, முறையாகப் பயிற்சி கொடுத்தால் இன்னும் ஆறே மாதத்தில் கிராண்ட்மாஸ்டராக ஆகிவிடுவான்.

மதுரையில் மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அரவிந்த். அவனுக்கு 3 வயது இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். 2 ஆண்டு களுக்கு முன்புதான் அவனது திறமை யைத் தெரிந்து கொண்டேன். அப்போதிருந்து பயிற்சி அளித்து வருகிறேன். ஆட்டத்தின் நடுவிலும் சரி, முடிவிலும் சரி.. காய்களை பாதுகாப்பதிலும் சரி.. அவனது நகர்த்தல்கள் அசத்தலாக இருக்கும். ஆனால், ஆட்டத்தை சிறப்பாக துவக்குவதற்கு அவன் இன்னும் அதிக பயிற்சி பெறவேண்டும். அதற்கு உலகம் முழுவதும் சென்று பல்வேறு செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால், அதற்கான நிதியுதவிகள் அரவிந்த் சிதம்பரத்துக்கு கிடைக்கவில்லை.

சென்னைக்கு வந்தால் செஸ் வளர்ச்சியில் கவனம் செலுத்த வசதி யாக இருக்கும் என்பதால் சமீபத்தில் தான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான். தற்போது சென்னை வேலம்மாள் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான் அரவிந்த்.

நிதியுதவி கிடைக்குமா?

அவனுக்கு நல்ல ஸ்பான்சர் கிடைத்தால், போதிய நிதியுதவிகள் கிடைத்தால் இந்தியாவுக்கு நிச்சயம் இன்னொரு கிராண்ட்மாஸ்டர் கிடைப்பார். போதிய பயிற்சிகளும் அனுபவமும் கிடைத்தால் அரவிந்த் சிதம்பரம் இன்னொரு கிராண்ட்மாஸ் டராக உருவெடுப்பான். தமிழகத் துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் பெருமை தேடிக்கொடுப்பான்.

இவ்வாறு ரமேஷ் கூறினார்.

விஸ்வநாதன் ஆனந்த், சுப்ரமணி யன் அருண் பிரசாத், பாஸ்கரன் அதிபன் ஆகிய இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் வரிசையில் அரவிந்த் சிதம்பரமும் இடம்பிடிப்பது நல்ல மனம் கொண்ட ஸ்பான்சர்கள் கையில் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்