விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன. அவற்றின் தாகம் தீர்க்க தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகிறது வனத்துறை.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை யிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக, புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் சில அரியவகை பட்டாம்பூச்சிகளும் இங்கு காணப்படுகின்றன.
கோடையில் வெயிலின் தாக்கத்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காதாலும் வன விலங்குகள் பல்வேறு இடங்களுக்கு நீரைத் தேடி அலைகின்றன. குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் புகுந்து சேதப் படுத்துவதும் உண்டு. தோட்டங் கள், பண்ணைகளில் உள்ள மரங்களையும் வனவிலங்குகள் விட்டு வைப்பதில்லை.
தண்ணீரைத் தேடி ஊருக்குள் புகுந்துவிடும் போதும், சாலையைக் கடக்கும் போதும் அடிபட்டு இறப்பதும் வழக்கமாகி வருகிறது.
வன விலங்குகள் உயிர் சேதத் தையும், விவசாயிகளின் பயிர் சேதத்தையும் தடுக்கும் வகையில் மேற்குத்தொடர்ச்சிமலை அபிவி ருத்தித் திட்டத்தின்கீழ் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அண்மையில் கட்டப்பட்டன. திருவில்லிபுத்தூர் பகுதியில் அம்மன்கோயில், புதுப்பட்டி, குன்னூர், ரெங்காதீர்த்தம், சாப்டூர் பகுதியில் மல்லபுரம், வத்திராயிருப்பு பகுதியில் தொப்பிமலை, ராஜபாளையம் பகுதியில் அம்மன்கோயில், வாலைக்குளம், சப்பாணி பரம்பு, அய்யனார்கோயில், தேவி யாறு பகுதிகளிலும் பிள்ளை யார்நத்தம், தொட்டியபட்டி பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் வனத்துறையால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி களைத் தேடி வன விலங்குகள் படையெடுத்து வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியது:
தண்ணீர் தொட்டிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் நிரப்பி வருகிறோம். யானைகள், காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், வரையாடுகள் அதிகம் இங்கு வருகின்றன. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜபாளையம் பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இதனால், முள்ளிக்கிடை ஆறு, வழுக்குப்பாறை ஆறு, மாவரசி யம்மன் கோயில் ஆறு, மலட்டாறு, நீராவி ஆறு மற்றும் அய்யனார் கோயில் ஆறுகளில் ஓரளவு தண்ணீர் ஓடத் தொடங்கியுள்ளது.
இதனால், வனப் பகுதியில் வன விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் தற்காலிகமாகக் கிடைத்துள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத் தில் காரியாபட்டி, நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள முட் புதர்களிலும் காட்டுப் பகுதியிலும் ஏராளமான அளவில் மான்கள் வசிக்கின்றன.
எனவே, இப்பகுதியிலும் ஆங்காங்கே குட்டைகள் அமைத்து தண்ணீர் நிரப்பவும், அதற்காக வனத்துறைக்குச் சொந்தமாக டேங்கர் லாரி வழங்கக் கோரியும் அரசுக்கு கடிதம் அனுப்பி யுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago