தனக்கு எதிராக 39 மாவட்டத் தலைவர்கள் பெயரில் கட்சித் தலைமைக்கு எழுதப்பட்ட கடிதம் உண்மையானதல்ல. கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இளங்கோவன் முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் தேசிய செய லாளர் சு.திருநாவுக்கரசர் கூறியுள் ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனத்தில் இவ்வளவு தாமதத் துக்கு என்ன காரணம்?
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர் பாக கட்சித் தலைமை பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. இந்தச் சூழலில், தமிழகத்தில் புதிய தலைவரை நியமிப்பதற்காக அனைத்து தலைவர்களிடமும் கருத்து கேட்டு வருகிறது. இந்த வாரத்துக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் இணக்கமாகவே செயல்பட்டீர்களே, தற்போது உங்களுக்கும் அவ ருக்கும் என்னதான் பிரச்சினை?
அதுதான் எனக்கும் தெரியவில் லை. கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக் குரிய விதத்தில் இளங்கோவன் பேசியபோது அவருக்கு எதிரான போராட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர். அப்போது, பத்திரி கையாளர்களை சந்தித்து, இது பே ான்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபடுவதை ஜெயலலிதா தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண் டேன். அதன்பிறகுதான் இளங் கோவனுக்கு எதிரான போராட்டங் கள் நிறுத்திக் கொள்ளப்பட்டன.
தேர்தல் நேரத்தில்கூட இளங் கோவன் அறந்தாங்கி வந்தார். மதுரையில் அவரோடு இருந்தேன். அவரது பிரச்சாரங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். ஆனால், எதற்காக எனக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
உங்களுக்கு எதிராக 39 மாவட் டத் தலைவர்கள், கட்சித் தலை மைக்கு கடிதம் எழுதியுள்ளனரே?
எனக்கு எதிராக 39 மாவட்டத் தலைவர்கள் எழுதியதாக கூறப் படும் கடிதம் உண்மையானது அல்ல. இளங்கோவன் ஆதரவா ளர்கள் சிலர் மட்டுமே கடிதத்தின் முதல் பக்கத்தில் கையெழுத்திட்டுள் ளனர். அடுத்தடுத்த பக்கங்களில் யாரும் கையெழுத்துப் போடவில் லை. ஏற்கெனவே, வருகைப் பதிவுகளில் போடப்பட்டிருந்த கையெழுத்துகளை பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள் ளனர். தலைமை யாரை தலை வராக அறிவிக்கிறதோ அவருடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உங்களுக்கு எதிராக இளங் கோவன் செயல்படுகிறார். இந்த நேரத்தில் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லையா?
நிறைய பேர் எனக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. நான் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தேன் என்பதுதான் இளங்கோ வன் தரப்பு குற்றச்சாட்டு. தமிழக காங்கிரஸ் பொருளாளரும் இளங் கோவனின் ஆதரவாளருமான நாசே.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சிவராமன் என பலரும் பாஜகவில் இருந்து வந்தவர்கள்தான். இளங்கோ வன்கூட சிவாஜி தொடங்கிய கட்சியில் இருந்தவர்தான். எனவே, இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் சொல்வது பொருத்தமாக இருக் காது. கட்சியை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இளங் கோவன் இப்படி செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
எதிர்ப்புக்கு காரணம் என்ன?
திருநாவுக்கரசரை இளங்கோவன் எதிர்ப்பதற்கு என்ன காரணம் என அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் தோல்வி குறித்து தமிழக தலைவர்களிடம் கட்சி மேலிடம் விசாரித்தபோது, இளங்கோவனுக்கு எதிராக திருநாவுக்கரசர் கருத்து கூறியதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதுதான் இளங்கோவனின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்’’ என்றனர். ஆனால், திருநாவுக்கரசர் தரப்போ, ‘இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு’ என்று மறுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago