விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By எல்.சீனிவாசன்

ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த வேண்டும்; பொங்கல் விடுமுறையை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் விவசாயிகளின் உயிரிழப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போரட்டம் நடத்தி வருகின்றனர.

இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர் பங்கு பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் பேசும்போது, ''சமீப காலமாக மாணவர்களாகிய நாங்கள் மத்திய அரசைக் கவனித்து வருகிறோம். மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக இல்லை. பயிர் கருகிச் சாகும் விவசாயிகளின் மரணத்தை கண்டுகொள்வதில்லை. இறப்பை அவமானப்படுத்தும் வகையில் அவர்களைப் புறக்கணிக்கிறது அரசு.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லை. தமிழக அரசும் நம்மைக் கண்டுகொள்வதில்லை.

இதைத்தொடர்ந்து விவசாயிகளின் பிரச்சனையை முன்னெடுக்கவும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

ஏதோ வந்தோம் போனோம் என்றில்லாமல், மாணவர்களும் நாட்டு நடப்பில் அக்கறை கொள்ள வேண்டும். நாங்கள் தொடங்கியுள்ள போராட்டம் போல தமிழகம் முழுக்கவுள்ள அனைத்து மாணவர்களும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்