நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க முடிவெடுத்துள்ள நிலையில், தே.மு.தி.க உள்ளிட்ட இதர கட்சிகளுடன் தி.மு.க கூட்டு சேருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்ட முடிவில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என கருணாநிதி பேசியுள்ளார். இது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே திமுக - தே.மு.தி.க கூட்டணி உருவாகலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.
ஆனால், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பதில் கூற மறுத்து வந்தார். ஆனால், திரைமறைவில் கூட்டணி குறித்து பேசப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இப்போது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியே வருவதால், தி.மு.க- தே.மு.தி.க கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து தே.மு.தி.க மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘நாங்கள் தேடிச் சென்ற போது, எங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. எப்போதும் அதிகாரத்தில் இருக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆசைப்படுகிறார். எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டமும் முடிந்துள்ளது. கூட்டணி குறித்து எங்கள் தலைவர் விஜயகாந்த் தான் இறுதி முடிவு செய்வார். தி.மு.கவுடன் கூட்டணி அமையலாம் அல்லது அமையாமல் கூட போகலாம்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago