மின் தடைக்கான உண்மையான காரணிகளை சரி செய்ய வேண்டும் என்று மின்வாரியத்துக்கு உணர்த்தும் வகையில் இளைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம் செய்தனர்.
ஜஸ்டிஸ் ராக்ஸ் என்ற குழுவினர், மின் தட்டுப்பாடு குறித்து விளக்க ‘ஓட்டை வாளி’ என்ற கலை நிகழ்ச்சியை சென்னை பெசன்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.
தமிழகத்தில் மின் தட்டுப் பாட்டுக்கான உண்மையான காரணங்களை சரி செய்யாமல், மேலும் மேலும் மின் உற்பத்தி செய்வது ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருப்பது போலாகும் என்ற கருத்து, பாடல்கள், மிமிக்ரி, வில்லுப்பாட்டு போன்ற பல வடிவங்களில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நித்யானந்த் ஜெயராமன் கூறுகையில், “ஆண்டு தோறும் ஜஸ்டிஸ் ராக்ஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சமூகத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் வகையில் செயல்படும் பெரிய முதலாளிகளின் கோர முகங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே இதன் நோக்கமாகும்” என்றார்.
மற்றொரு ஒருங் கிணைப் பாளரான வெரோனிகா கூறுகை யில், “வீட்டில் பயன்படுத்தும் குண்டு பல்புகளை அகற்றிவிட்டு சி.எஃப்.எல் பல்புகளை பயன் படுத் தினாலே 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும்.
இதுபோன்ற சிறு சிறு முயற்சிகளை எடுக்காமல், கூடங்குளம் போன்ற அணு உலையை கட்டுவது அவசியமற்றது” என்றார்.
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் 14 மணி நேரம் மின் தடை இருப்பதை வில்லுப்பாட்டு மூலம் ஊரூர் குப்பத்து குழந்தைகள் விளக்கினர். சுரங்கம் தோண்டுவதால் பழங்குடி யினருக்கும் இயற் கைக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவாவின் ஸ்பேஸ் நாடகக் குழுவும் கூத்துப்பட் டறையும் இணைந்து நாடகமாக நடத்திக் காட்டின.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago