ஒசூர் தொடர்மழையால் 22 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கர்நாடகா நீர்பிடிப்புப் பகுதிகளிலும், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், 42 அடி தண்ணீர் உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இன்றைய காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து 1020 கனஅடியாகவும், அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் உள்ள காமன்தொட்டி, தொரப்பள்ளி, பாத்தகோட்டா, பேரண்டப்பள்ளி, ஆழியாளம், போடூர் உட்பட 22 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், தரைப்பாலங்களைக் கடந்து செல்ல வேண்டும் என வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் 47 அடியை எட்டினால் மட்டுமே முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும், இதற்காக கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நேற்று ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று பெய்த கனமழையால் அணைக்கு வினாடிக்கு 1024 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 45.85 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 12 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்