எண்ணூர் நெடுஞ்சாலையில் நெரிசல்: கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கோரிக்கை

By ச.கார்த்திகேயன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் எண்ணூர் நெடுஞ்சாலை, கார்னேசன் நகரில் பல ஆண்டுக ளாக போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வரும் நிலையில், அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட் டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி, கொருக்குபேட்டையில் செல்லும் எண்ணூர் நெடுஞ்சாலையின் குறுக்கே, கார்னேசன் நகர் பகுதி யில் ரயில் பாதை செல்கிறது. அந்த ரயில் பாதை வழியாக சரக்கு ரயில்கள் தினமும் 10 நடைகள் இயக்கப்படுகின்றன. ரயில் பெட்டி களை கிடங்குகளில் விட்டுவிட்டு இன்ஜின்கள் மட்டும் திரும்புகின் றன.

இந்த நிகழ்வுகளின்போது, அங்கு ரயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. இப்பகுதியில் ரயில் பாதை வளைந்திருப்பதால் ரயில்கள் மெதுவாகவே செல்லும். ரயில் செல்ல அதிக நேரம் பிடிப்பதால் அங்கு எப்போதும் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

அந்த சாலையில் எண்ணூர் துறைமுகம், மணலியில் உள்ள தொழிற்சாலைகள், தண்டை யார்பேட்டையில் உள்ள பல்வேறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ரயில்வே கேட் பகுதி குறுகலாக இருப்பதால், இருபுறமும் வாகனங்கள் எளிதாக செல்ல முடிவதில்லை. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக கொருக்கு பேட்டையைச் சேர்ந்த திருமுருகன் கூறும்போது, “இப்பகுதியில் ஏற் படும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள், மாணவர்கள் பாதிக் கப்படுகின்றனர். அதனால் கார்னே சன் நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல், மேயராக இருந்த சைதை துரைசாமி, எம்பி வெங்க டேஷ்பாபு, அதிமுக அவைத் தலை வர் மதுசூதனன் ஆகியோர் எங்கள் பகுதிக்கு வந்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அப்போது, கார்னேசன் நகர், எழில்நகர் ஆகிய இரு இடங்களிலும் ரூ.110 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. பொதுமக்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது” என்றார்.

கொடுங்கையூரைச் சேர்ந்த பிரசாந்த் கூறும்போது, “நான் இந்த வழியாகத்தான் மணலியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும். தினமும் எழில் நகர் மற்றும் கார்னேசன் நகர் ரயில்வே கேட்டுகள் ஒரே நேரத்தில் மூடப்படுகின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேரத்தோடு வேலைக்கு செல்ல முடியவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்