கேரளத்தில் நகரமயமாக்கல் அதிகரிப்பால் தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை வீழ்ச்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தின் 2-வது பெரிய நதியான வைகை நதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வருஷநாடு மலை, மேற்கு பழனி மலை, அகமலை, ஹைவேவிஸ், மேகமலை மற்றும் பெரியார் வனப் பகுதிகள் உள்ளிட்டவை வைகை நதி யின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும்.

வைகை நதி 258 கி.மீ. நீளமும், 7,031 சதுர கி.மீ. பாசனப் பரப்பையும் கொண்டுள்ளது. வைகை நதியின் நீர் ஆதாரம், தென்மேற்கு பருவமழையையே பெரும்பாலும் நம்பி இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் குறைந்து வருவதால் வைகை ஆறு நிரந்தர மாகவே வறண்டுவிட்டது. இதற் கான காரணம் குறித்து வேளாண்மை பொறியாளர் பிரிட்டோ ராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தின் மொத்த மழை அளவு 857 மி.மீ. தென்மேற்கு பருவமழையின்போது 373 மி.மீ., வடகிழக்கு பருவமழையின்போது 305 மி.மீ. மழை பெய்யும். கடந்த சில ஆண்டுகளாகவே கேரளத்தில் அதிக அளவு மரங்கள் வெட்டப்பட்டு நகரமயமாக்கல் பரப்பு அதிகமாகி உள்ளது. இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அம் மாநிலத்தின் இயல்பான மழை அளவில் 62 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை 14 நாட்கள் பெய்யும். இந்த ஆண்டு வெறும் 3 நாட்களே மழை பெய் துள்ளது. கேரளத்தில் 37 நாட் களுக்குப் பதில் 11 நாட்களே மழை பெய்துள்ளது. தமிழகப் பகுதியை பொருத்தவரையில் தென்மேற்கு பருவமழை வைகை நீர்ப்பிடிப்பு பகுதியில் மட்டுமே அதிக அளவு மழைப்பொழிவை கொடுக்கிறது. கடந்த 6 ஆண்டுகள் மழை அளவை ஒப்பிடும்போது, வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை அளவு மிகவும் குறைவு.

பொதுவாக தமிழக மலைப்பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து வெளிப்படும் நீராவியானது செறி வாகி பருவமழையுடன் இணைந்து செயல்படும்போது முழுமையான தென்மேற்கு பருவமழையாக கிடைக்கிறது. மரங்கள் வெட்டப் படுவதால் அதிலிருந்து வெளிப் படும் நீராவியின் செறிவு தடைப் பட்டு தமிழகத்துக்குள் வரும் பருவ மழையின் மேகங்களில் உள்ள ஈரப்பதத்தை, தமிழக, கேரள தரைப் பகுதிகளில் இருந்து வெளிப்படும் வெப்பம் குறைத்துவிடுவதால் மழைப்பொழிவோ, காற்றில் ஈரப் பதமோ இல்லாத சூழல் கடந்த 6 ஆண்டாக நிலவுகிறது என்றார்.

மழை அதிகரிக்க என்ன செய்யலாம்?

வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் மேலும் கூறும்போது, “கேரள, தமிழக காடுகள், அவற்றைச் சுற்றிய பட்டா நிலங்களில் பெரிய மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும். மரம் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய மரக்கன்றுகளை தேயிலை தோட்டங்களில் நடலாம். குரோலியா மற்றும் முள் முருங்கை மரங்களை வளர்ப்பதை அதிகப்படுத்த வேண்டும். இம்மரங்கள் தேயிலை, ஏல வளர்ச்சிக்கு உகந்தது. வருஷநாடு ஆண்டிபட்டி, சேடபட்டி, மேலூர், நிலக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள வயல்வெளிப் பகுதிகளில் 2 ஏக்கர் நிலத்துக்கு ஒன்று என்ற விகித்தில் வேம்பு, புங்கன், நாவல், போன்ற பல்வகை பலன்தரும் மரங்கள் நடப்பட்டால், காற்றின் ஈரப்பதம் சமமாகி நிலையான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இம்மாதிரியான மரங்கள், மிகவும் சரிவான மேற்குத் தொடர்ச்சி மலையில் தெரியும் பாறைகளில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை சமன் செய்ய உதவும். மேட்டுப்பாங்கான நிலங்களில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களில் சம உயர வரப்புகள், குழி எடுத்து வரப்பு அமைத்தல், அமுங்கு நீர் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் போன்றவற்றை அமைப்பதால் இப்பகுதிகளில் சிறிதளவு மழையையும் உபயோகப்படுத்தி நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பாக அமையும்” என்றார்.

மழை நாளை கணக்கீடுவது எப்படி?

தென்மேற்கு பருவமழை மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை பெய்ய வேண்டும். இந்த நாட்களில் தினசரி பெய்த குறைந்தபட்ச மழையளவு 0.01 மிமீ முதல் 30 மி.மீ. வரை பெய்த மழை அளவுகளை மொத்தமாகக் கணக்கிடுதல் மொத்த பருவமழை அளவாகக் கருதப்படுகிறது. இந்த மொத்த பருவமழை அளவை, மொத்த தென்மேற்கு பருவ நாட்களால் வகுத்தால் வரும் சராசரி மழை அளவு ஒரு மழைநாளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்