அரசு மருத்துவமனையில் 69% இட ஒதுக்கீடு வேண்டும்: கி.வீரமணி

By செய்திப்பிரிவு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அரசு பல் நோக்கு மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. இதில் பேராசிரியர்கள், இயக்குநர்கள், பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமனத்தில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கோரியுள்ளார்.

இதனை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி பெரியார் திடலில் சமூகநீதி ஆதரவாளர்களின் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது. இதற்காக அவர் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பல் நோக்கு மருத்துவமனையில் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

1928 முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை குழி தோண்டி புதைப்பது சமூக அநீதியாகும். தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசை செயல்பட வைக்க தேவையான முடிவுகளை வரும் 9-ம் தேதி எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்