தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

By ராமேஸ்வரம் ராஃபி

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே சுமார் 100 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரக கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்து ராமேஸ்வரம் மீனவர்களடம், 'இது இலங்கை கடற்பகுதி; இங்கு மீன்பிடிக்கக் கூடாது' எச்சரிக்கை விடுத்ததோடு 40 விசைப்படகுகளில் மீனவர்களின் வலைகளை அறுத்த கடலுக்குள் வீசினர்.

மேலும், சூசை என்பவரது படகில் இலங்கை கடற்படையினர் கற்களை விசியதில் விசைப்படகின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலினால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசரமா கரை திரும்பினர். மேலும் சிலர் வழக்கத்திற்கு மாறான இடங்களில் வலை விரித்து போதிய மீன்பாடு இல்லாமல் வெறும் கையுடன் கரை திரும்பினர்.

புதுக்கோட்டை மீனவர்கள் 50 பேரின் காவல் நீட்டிப்பு

கடந்த நவம்பர் 20 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்த், குமரேசன், குரளரசன், முத்தையா ஆனந்த் உள்ளிட்ட 20 மீனவர்களையும், டிசம்பர் 12ம் தேதி அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்களது காவலும் செவ்வாய்கிழமையுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 50 பேரையும் மீண்டும் செவ்வாய்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 50 பேருக்கும் ஜனவரி 13 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் 50 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்