தருமபுரி இளவரசன் வழக்கு முடித்துவைப்பு: தற்கொலையே என்ற வாதத்தை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

தருமபுரி இளைஞர் இளவரசனின் மர்ம மரணம் ஒரு தற்கொலையே என சிபிசிஐடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வுள்ளதாக இளவரசன் தரப்பு வழக் கறிஞர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்தனர். 2012-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்துக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நவம்பர் 7-ம் தேதி இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையில் திவ்யா தனது பெற்றோருடன் செல்ல மறுத்ததால், மனவேதனை அடைந்த திவ்யாவின் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த பிரச்சினை சாதிக் கலவரமாக மாறியது.

இதில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி பகுதிகளில் வீடுகள் தாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என திவ்யா மறுத்தார். அதற்கு அடுத்த நாள் 2013 ஜூலை 4-ம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்ட வாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசனின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிறப்பு புல னாய்வுக் குழுவுக்கு மாற்றக்கோரி இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘இளவரசனின் உடலை உடற்கூராய்வு செய்த மருத் துவர்கள் வெவ்வேறு கருத்துக் களை தெரிவித்துள்ளனர். எனவே இதில் சந்தேகம் உள்ளதால் இந்த வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவ.25-ம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவி்ட்டது. 2017 பிப். 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என் றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது ‘‘மூன்று மருத்துவ குழுக்களால் நடத்தப்பட்ட இளவரசனின் பிரேதப் பரி சோதனை முடிவுகள் மற்றும் இளவரசன் உடலருகே கிடந்த தற்கொலை கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் புலன் விசாரணை நடத்தினோம். இளவரசனின் மர்ம மரணம் தற்கொலையே என விசாரணையில் தெரிய வரு கிறது” என சிபிசிஐடி கூடுதல் எஸ்பி ஸ்டாலின் உயர் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால் சிபிசிஐடி போலீஸாரின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, எஸ்.ரஜினிகாந்த் ஆகியோர், “ சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையும் ஒருதலைபட்சமாக உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும். அதுவரை வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு குறித்து வழக் கறிஞர் எஸ்.ரஜினிகாந்த் கூறும் போது, “சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் சிபிசிஐடி போலீஸாரும் தெளிவாக இது தற்கொலைதான் என்பதை உறுதிசெய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்களை வைத்து இது தற்கொலை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இளவரசனின் மரணத்தில் நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். எனவே இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்றார்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் இளவரசன் உடலருகே கிடந்த தற்கொலை கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் புலன் விசாரணை நடத்தினோம். இளவரசனின் மர்ம மரணம் தற்கொலையே என விசாரணையில் தெரிய வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்