ரப்பர் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தும் வியாபாரிகள் உரிய விலை தர மறுப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தினசரி 1,000 டன்னுக்கு மேல் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரப்பர் விவசாயிகளும், தொழி லாளர்களும் இதன் மூலம் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
விலை வீழ்ச்சி
கடந்த 3 ஆண்டுகளாக ரப்பர் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இந்தோனே ஷியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுவதாலும், செயற்கை ரப்பர் அதிகளவில் தொழிற்சாலைகளில் பயன்பாட்டு க்கு வருவதாலும் ரப்பர் விலை கிலோ ரூ.70-ஆக குறைந்தது.
இதனால் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கும் செலவு தொகை கூட கிடைக்காத நிலையில், ரப்பர் பால் வெட்டுவதை பெரும்பாலான விவசாயிகள் விட்டுவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், அருமனை, கீரிப்பாறை, கரும்பாறை, ஆலஞ்சோலை, பாலமோர், நெட்டா, பேச்சிப்பாறை, சிற்றாறு, தடிக்காரன்கோணம், திருவட்டாறு உட்பட பல பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் வெறுமனே காணப்பட்டன. பல தோட்டங்களில் ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
பால்வெட்டும் பணி
கடந்த இரு மாதங்களாக சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை சற்று உயரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இயற்கை ரப்பர் ரூ.170-ஆக உயர்ந்துள்ளது. இதனால், ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களை சீரமைத்து பால்வெட்டுவதற்கான பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால், விவசாயிகளிடம் ஒரு கிலோ ரப்பர் ரூ.130-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை விலைக்கு நிகராக விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை வேண்டும்
குலசேகரத்தை சேர்ந்த ரப்பர் விவசாயி ராஜையன் கூறும்போது, “எப்போதுமே சர்வதேச சந்தையின் விலை நிர்ணயத்துக்கு ஏற்பவே இயற்கை ரப்பரை கொள்முதல் செய்வர். ஆனால், தற்போது கிலோவுக்கு ரூ.40 குறைவாகவே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
பணம் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை இதற்கு காரணமாக கூறுகின்றனர். ரொக்கப் பணம் இல்லையென்றால் வங்கி கணக்கிலோ, காசோலை மூலமோ ரப்பருக்கான உரிய விலையை வழங்க முன்வர வேண்டும். மேலும், ரப்பர் வாரியமும், மத்திய, மாநில அரசுகளும் தலையிட்டு சர்வதேச சந்தை விலையில் ரப்பரை கொள்முதல் செய்யும் முறையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
அப்போதுதான், தமிழகத்தில் ரப்பர் விவசாயம் மீள்வதுடன், இதை வாழ்வாதாரமாகக் கொண்ட பல லட்சம் விவசாயிகளும், தொழிலாளர்களும் மீள முடியும்” என்றார் அவர்.
விழிப்புணர்வு தேவை
இதுதொடர்பாக ரப்பர் வாரிய வட்டாரத்தினர் கூறும்போது, “ஏற்கெனவே ரப்பர் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ள நிலையில், சர்வதேச சந்தை மதிப்பில் மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். ரப்பர் விவசாயிகளும் குறைந்த விலைக்கு கொடுக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago