தமிழக மீனவர்களுக்கு இனிப்பு வழங்கிய இலங்கை கடற்படை வீரர்கள்: மீனவர்கள் மறுப்பு

By செய்திப்பிரிவு

கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை வீரர்கள் இனிப்புகளையும், குளிர்பானங்களையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மீனவர்கள் சங்கம் ஒன்றின் தலைவர் எமிரேட் மேலும் கூறியதாவது: “அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம், ஜகதாபட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை வீரர்கள் கனிவுடன் பேசியுள்ளனர். அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கியுள்ளனர்” என்றார்.

கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை தாக்குவது, கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரின் இந்த திடீர் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தரவில்லை. வாக்கெடுப்பை புறக்கணித்தது.

இதைத் தொடர்ந்து இலங்கைச் சிறையில் இருந்த 98 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இப்போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் இனிப்பு வழங்கியுள்ளனர். இலங்கைக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டதுதான் இதற்கு காரணம் என்று தெரிகிறது.

மீனவர்கள் மறுப்பு

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் இந்தியா-இலங்கை மீனவப் பேச்சுவார் தையின்போது ராமேசுவரம் மீனவர்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட தேவதாஸ் கூறியதாவது,

ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத் திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அனுப்பினர்.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு குளிர்பானம், பிஸ்கட் கொடுத்து உபசரித்தார்கள் என்பது உண்மை அல்ல என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்