போட்டி போட்டு ஆய்வு பணிகள் நடப்பதுடன், மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முயற்சியில் முதல்வரை தொடர்ந்து ஆளுநரும் புதுச்சேரியில் ஈடுபடுவதால் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் ஏதாவது நன்மை நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துள்ளனர்.
புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சரவை உள்ளது. அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் நிர்வாகியாக குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் உள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தவுடன் ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே ஆய்வுக்கூட்டத்தை கிரண்பேடி கூட்டி பணிகளை தொடங்கினார். முக்கியமாக அவர் மோடியை கவர தூய்மைப்பணிகளில் கவனம் செலுத்துகிறார். அத்துடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது பகுதிக்கு சென்று ஆய்வு செய்வார். புதுச்சேரி தூய்மைப்பணி, ரயில்வே நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கம், பஸ் நிலைய தூய்மைப்பணி ஆகிய பணிகளுக்கு மக்களிடத்தில் வரவேற்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சாலையோர கடைகள் அகற்றம், குப்பைகளை தரம்பிரித்து தராவிட்டால் ரூ. 500 அபராதம் என்ற உத்தரவுகள் கடும் எதிர்ப்பால் முடங்கி போனது.
அதேபோல் முதல்வர் நாராயணசாமி பொறுப்பேற்றவுடன் பள்ளிகள், அரசு அலுவலகங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்ய தொடங்கினார். அதையடுத்து ஆளுநர் கிரண்பேடியும் போட்டி ஆய்வுகளை நடத்தத்தொடங்கினார்.
பின்னர் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் சந்தித்தனர். அதையடுத்து ஆளுநர் கிரண்பேடியும் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அதிமுக, சிபிஎம் தரப்பு செய்யத்தொடங்கியுள்ளன. ஆனால், காங்கிரஸ் தரப்போ குறிப்பாக முதல்வர் நாராயணசாமியோ அது பற்றி கருத்து தெரிவிப்பதில்லை. விரைவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்வதில்தான் நாராயணசாமி கவனம் செலுத்துகிறார்.
இவ்விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் மக்கள் பிரதிநிகளான அமைச்சரவை ஒருபுறம், புதுச்சேரி நிர்வாகியாக ஆளுநர் மறுபுறம் உள்ளனர். இருதரப்பும் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இதில் யாருடைய உத்தரவை பின்பற்றுவது என்பதில் குழப்பம் உள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் பணிகள் நடத்தக்கூறினால் என்ன செய்வது என தெரியவில்லை" என்று குறிப்பிடுகின்றனர்.
முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி இடையில் தொடர்ந்து மவுனமான மோதல் தொடர்ந்தாலும் இருவரும் தங்களின் புகைப்படம் செய்திகளை ட்விட்டரில் பதிவிடுவதில் இணையாக உள்ளனர். ஆய்வுகள், மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு எதுவாக இருந்தாலும் இருவரின் டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக வெளியாகிறது. புகைப்படம் எடுத்து பதிவிட ஆட்களையும் இருதரப்பும் நியமித்துள்ளனர்.
போட்டிப்போட்டுக்கொண்டு நாராயணசாமி, கிரண்பேடி செய்யும் பணிகளால் புதுச்சேரிக்கு ஏதாவது மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago