இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும் வாஞ்சிநாதனின் தியாகமும், புகழும், வடமாநிலங்களை குறிப்பாக டெல்லியை எட்டுவதற்கு தமிழக எம்பிக்களும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வாஞ்சிநாதனின் நினைவு தினத்தை இன்று அனுசரிக்கும் வேளையில் இதை சமூக ஆர்வலர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வாஞ்சிநாதன், அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை, மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டார் என்ற அளவில்தான் அறியப்பட்டிருக்கிறார். 1806-ம் ஆண்டில் நடைபெற்ற வேலூர் புரட்சிக்குப் பின், 1910-ம் ஆண்டு வரையில் ஆங்கிலேயருக்கு எதிராக யாரும் ஆயுதம் ஏந்தவில்லை. 105 ஆண்டு கள் கழித்து 1911-ல் ஆங்கிலே யருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் வாஞ்சிநாதன்.
பகத்சிங்குக்கு முன்னோடி
ஆங்கிலேயரை எதிர்த்து தீரச்செயல் புரிந்ததில் பஞ்சாபைச் சேர்ந்த பகத்சிங்குக்கும் முன்னோடி யானவர் இவர். பஞ்சாபில் யாரும் பகத்சிங்கை ‘பஞ்சாபின் வாஞ்சிநாதன்’ என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால் தமிழகத்தில்தான் போட்டித் தேர்வுக்கான பொது அறிவு நூல்கள் வாஞ்சிநாதனை ‘தமிழ்நாட்டின் பகத்சிங்’ என்று தமிழக மாணவர்களுக்கு பொது அறிவைப் புகட்டுகின்றன.
வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து அவரது நினைவு தினத்தின்போது மட்டும் பேசிவிட்டு அதை மறக்கும் நிலையே தற்போது நீடிக்கிறது. தென் தமிழகத் தில் இருந்து ஆங்கிலேயரை அலற வைத்த வரலாற்றுக்குச் சொந்தக் காரரான வாஞ்சிநாதனின் புகழை வடமாநிலத்தவரும் அறியவும், குறிப்பாக மத்திய அரசுக்கு எட்ட வும் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் இங்கு உள்ள எம்பிக் களுக்கு இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வாஞ்சி இயக்க நிறுவன தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் சாவர்க்கரின் உருவப்படம் திறக்கப் பட்டுள்ளது. அதுபோல் வாஞ்சி நாதனின் உருவப்படத்தையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். சாவர்க்கர் தனது காலாபானி (கருப்புத் தண்ணீர்) என்ற நூலில் வாஞ்சிநாதனின் தியாகத்தையும், தீரத்தையும் புகழ்ந்து எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கருடன் இணைந்து போராடிய மேடம் காமா, அப்போது பிரான்ஸில் ஆசிரியராக இருந்துகொண்டு வெளியிட்டு வந்த ‘வந்தேமாதரம்’ என்ற தனது பத்திரிகையில், வாஞ்சிநாதனின் தியாகத்தை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார்.
ரயில்கள் இயக்கலாம்
வாஞ்சிநாதனின் புகழ் டெல்லி யையும் சென்றடையும் வகையில், அவர் தாய்த்திருநாட்டுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணித்த மணி யாச்சி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு அதிவேக ரயிலை இயக்க வேண்டும். இதன் மூலம் வாஞ்சிநாதன் கவுரவிக்கப்படுவதுடன், தென்மாவட்ட மக்களுக்கு கூடுதலாக ஒரு ரயில் வசதியும் கிடைக்கும்.
மேலும் வாஞ்சி மணியாச்சியில் இருந்து வாஞ்சி நாதன் பிறந்த திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாஞ்சிநாதன் இந்தியத் திருநாட்டுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணித்த நினைவு தினமான இன்று காலை 10.35 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நகராட்சி சங்கு ஒலிக்கப்படும். தொடர்ந்து வாஞ்சிநாதன் நடுகல் லுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. மேலும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago