புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் ஜூலை 2011-உடன் முடிவடைந்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படவே இல்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் பெருமாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி புதுவை மாநில தேர்தல் ஆணையராக உதிப்திரே கடந்த மே 2012-ல் பதவியேற்றார். அதன் பிறகு நடந்த வழக்கு விசாரணையில் 2013 ஜனவரி 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து 2013 ஜனவரி 4,8,10 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அப்போது தெரிவித்தது.
இந்நிலையில் முன்னாள் கவுன்சிலர் ஆனந்த லட்சுமி, ’தொகுதி மறு சீரமைப்பு 2011 மக்கள் தொகை அடிப்படையில் இல்லை’ எனக் கூறி, தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததுடன், 2 மாதங்களுக்குள் முறையான மக்கள் தொகைப் பட்டியலை மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற்று, தொகுதி சீரமைப்புப் பணியை முடித்து, அதிலிருந்து 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவினால் வார்டு சீரமைப்புப் பணிகளை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டு, இந்தக் குழு தொகுதி சீரமைப்புப் பணிகளை தொடங்கிய நிலையில், கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக மக்கள் தொகை விவரம் எடுக்கப்படாமல் வருவாய் கிராமம் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதால் வார்டுகளை சீரமைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.எம். புதுவை மாநிலச் செயலர் பெருமாள் பேசும்போது, ’உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி மக்கள் தொகைப் பட்டியலை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற மாநில அரசு முயற்சி எடுக்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதுச்சேரி அரசுக்கு விருப்பமில்லை எனத் தெளிவாகிறது.
இதனால் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago