டி.டி. மருத்துவ கல்லூரியை ஏற்க தயார்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூரில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அருகே இயங்கி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு அளித்த அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் ரத்து செய்ததால், அக்கல்லூரி கல்லூரி மூடப்பட்டது.

அந்தக் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரியை அரசு ஏற்று நடத்தக் கோரியும், தங்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் ஒதுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜரானார்.

அப்போது, டி.டி. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், அந்தக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை ஏற்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசின் தரப்பைப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பைத் தள்ளி வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்