ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய்த்துறை பணி

கடலூர் மாவட்டத்தில் மக்கள் சார்ந்த நலத் திட்டப் பணிகளுக்காக வரு வாய் துறையினர் சார்- ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் நில ஆர்ஜிதப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கடலூரிலும் மந்தாரக்குப்பத்திலும் நில ஆர்ஜித அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவ லகங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் ஓய்வுபெற்ற வருவாய்த்துறை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர், வாகன ஓட்டுநர் மற்றும் வட்டாட்சியர்களும் அடங்குவர். இவர்களில் வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம், வட்டாட்சியர்களுக்கு ரூ.25 ஆயிரம், அலுவலக உதவியா ளர்களுக்கு ரூ.10 ஆயிரம், வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.9 ஆயிரம் என தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

தற்போது சிதம்பரம் - சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நில ஆர்ஜிதப் பணிகள் தொடங்கியுள்ளன.

இப்பணிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 12 ஓய்வுபெற்ற வருவாய் துறை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, நெய்வேலி யில் உள்ள நில ஆர்ஜித அலுவலகத்தில் 10 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் விக்கிரவாண்டி -தஞ்சை தேசிய விரிவாக்கப் பணிகளுக்கான பணியிலும் ஓய்வுபெற்றவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சார்-ஆட்சி யர் பொறுப்பிலிருக்கும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

“காலி யாக உள்ள இடங்களில் தான் ஓய்வு பெற்ற ஊழியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் அமர்த்தியுள்ளோம். அவ்வாறு அமர்த்திக்கொள்ள யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும் அவர்களின் அனுபவம் காரணமாக பணிகள் எளிதாக முடியும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE