எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல்சார் தொழில்கள் சம்பந்தப்பட்ட 13 வகையான பயிற்சி வகுப்புகள்: பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் நடத்த திட்டம்

By குள.சண்முகசுந்தரம்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் அளிக்கப்பட்டு வரும் கடல்வள பாதுகாப்பு, கடல் உணவுகளை மதிப்புக் கூட்டு தல், நவீன மீன்பிடி முறைகள், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகளைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

31 கடலோர மாவட்ட மீனவர்கள்

எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கமான ‘அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்’ கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் (MPEDA) ‘நெட் ஃபிஷ்’ அமைப்புடன் இணைந்து மீனவர் மேம்பாட்டுக்கான பயிற்சி களை அளித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 31 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு கடல் தொழில் ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் இந்த மையம் அளித்து வருகிறது.

1,230 பேருக்கு பயிற்சி

கடந்த ஆண்டின் மத்தியில் மீன வர்களுக்கு கடல் தொழில் சம்பந் தப்பட்ட 13 வகையான சிறப்புப் பயிற்சிகளை இந்த மையம் அளிக் கத் தொடங்கியது. இதில் இதுவரை 400 கல்லூரி மாணவர்கள் உட்பட 1,230 பேர் பயிற்சி பெற்றிருப்பதாக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.வேல்விழி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்போது பூம்புகாரில் உள்ள எங்களது மையத்தில், சுகாதார மான முறையில் மீன்பிடித்தல், பதப்படுத்துதல், வளம் குன்றா மீன்வளர்ப்பு, ஜி.பி.எஸ். ஆப ரேஷன் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு மீன் களைப் பதப்படுத்துதல் உள்ளிட்ட 13 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மதிப்பு கூட்டுதல்...

சந்தையில் மலிவாக கிடைக் கும் மீன் வகைகள் பல நேரங் களில் வலைகளில் அதிகமாக வந்துவிடும். அவற்றை அப்படியே சந்தைக்கு அனுப்பினால் மீனவர் களுக்கு உரிய விலை கிடைக்காது. அதனால், அவற்றைப் பதப்படுத்தி மசாலா பொருட்கள் உள்ளிட்ட வற்றை சேர்த்து மதிப்புக் கூட்டி, 125 வகையான பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சிகளையும் நாங்கள் அளித்து வருகிறோம்.

2 கட்ட பயிற்சிகள்

மீன் கழிவுகளை உரமாக்கி காசாக்கும் உத்திகளையும், படகு களில் உள்ள டீசல் இன்ஜின்கள் பழுதானால் அதை சரிசெய்வ தற்கான பயிற்சிகளையும் சொல்லித் தருகிறோம். ஆரம்பகட்ட பயிற்சிகள் அதிகபட்சம் ஐந்து நாட்களும் அடுத்தகட்ட பயிற்சிகள் ஒருமாதத் துக்கும் இருக்கும்.

பயிற்சியில் பங்கெடுப்பவர் களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை நாங்களே ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். பயிற்சி முடித்தவர்கள் ஒருங் கிணைந்த பண்ணையம் அமைத் தல், மதிப்புக்கூட்டு பொருட்களை உருவாக்குதல் என தற்போது களத்திலும் இறங்கிவிட்டார்கள். இதனால், இந்தப் பயிற்சிகளை நோக்கி இப்போது கல்லூரி மாணவர்களும் வர ஆரம்பித் திருக்கிறார்கள்.

பயிற்சியில் பங்கெடுப்பவர் களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சான்றிதழ்கள் தற் போது வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தப் பயிற்சி வகுப்புகளை ஏதாவது ஒரு பல் கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற திட்டமிட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்