மக்கள் நலப் பணியாளர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - தமிழக அரசு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய் துள்ளது.

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் “மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபருக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மாற்றுப் பணி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அவர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனுவில், “மக்கள் நலப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். அவர் களுக்கு மாற்றுப் பணி வழங்க இயலாது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இம்மனு விரைவில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE