டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் சுப்பையா. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பையாவை நிலத்தகராறு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பாசில் என்ற வழக்கறிஞர், அவரது சகோதரர் போரிஸ், இவர்களின் பெற்றோர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை திட்டத்தை தயார் செய்து கொடுத்ததாக திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கொலை செய்ததாக ஜேம்ஸின் உதவியாளர்கள் முருகன், அய்யப்பன், செல்வப்பிரகாஷ் ஆகிய 4 பேர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் வில்லியம்ஸ் என்ற வழக்கறிஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். டாக்டர் சுப்பையாவை கொலை செய்ய இவரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. வில்லியம்ஸ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
தலைமறைவாக இருக்கும் வில்லியம்ஸுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். வில்லியம்ஸ் இருக்கும் இடம் குறித்து ஜேசுராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago