விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றிய 45 பேருக்கு சமாரிடன் விருது: 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிறந்த பணியாற்றியவர்களுக்கும் விருது

By செய்திப்பிரிவு

விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காக்க 108 ஆம்புலன் ஸை அழைத்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

இடர்ப்பாட்டில் இருப்பவர்க ளின் உயிரை காப்பாற்றுபவர்கள் ஆங்கிலத்தில் சமாரிடன் (Samaritan) எனப்படுவர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற அரும்பணியைச் செய்த 45 பேருக்கு சிறந்த சமாரிடன் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ. என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “ஆம்புலன்ஸ் சேவை வேண்டி பெறப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பவர்கள் எதிர்முனையில் பேசுபவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது சவாலான விஷயமாகும். நமது சாலைகளில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்தா லும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடப்படுகிறது என்பது நமது மனித நேயத்தின் அளவு கோல்” என்றார்.

“108 ஆம்புலன்ஸ்-ன் அழைப்பு மையத்துக்கு நாள்தோறும் 13 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. மருத்துவமனைகள், காவல்துறை, தீயணைப்பு சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக இது செயல்படுகிறது. ஆம்புலன்ஸை அழைக்க மக்களிடம் இருக்கும் தயக்கத்தைப் போக்கவே மூன்றாவது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது” என்று 108 ஆம்புலன்ஸ் விற்பனை மற்றும் மருத்துவமனை உறவுகளுக்கான தலைவர் பிரபு தாஸ் கூறினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் தஸ்லீம் கூறுகையில், “ஆபத்தில் இருப் பவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு பிரச்சினை வரும் என்று பலர் தயங்குகிறார்கள்.

ஆபத்தில் இருக்கும் ஒருவரை காப்பாற்றி அதற்காக காவல் நிலையமோ, நீதிமன்றமோ சென்றால்தான் என்ன? சாதி, மதம் பாராமல் அனைவருக்கும் உதவி செய்தால், நாம் ஆபத்தில் இருக்கும்போது பிறர் உதவி செய்வார்கள்” என்றார்.

சாலை விபத்தில் சிக்கிய தனது அண்ணனை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸை அழைத்தவருக்கு நன்றி தெரிவித்து ரமேஷ் பாபு கூறுகையில், “108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நாம் நன்றி தெரிவிப்பதைக்கூட எதிர்பார்க் காமல் அடுத்த நபரை காப்பாற்ற விரைந்து செல்கின்றனர். சில தினங்களுக்குப் பிறகு நோயாளி யைப் பற்றி விசாரித்துக் கொள்கின் றனர்” என்றார்.

இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்பு ரம், கடலூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் 32 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்