மதுரையில் சமீப காலமாக பெண்களிடம் நகை பறிப்பு, பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து அதிகளவில் கொள்ளை நடப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். கட்டிட ஒப்பந் ததாரர். இவரது மனைவி லாவண்யா (25). இவர் இரண்டு நாட்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது பைக்கில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை புது விளாங்குடியைச் சேர்ந் தவர் ஜெயசந்திரன். இவரது மனைவி ரோஸ்லின் மேரி (50). இவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருச்சி சென்றிருந்தனர். நேற்று திரும்பி வந்தபோது, வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த நகை, பணம் திருடு போகவில்லை. இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர். மதுரை மேல அனுப் பானடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் சுரேஷ்குமார், 21-ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்றார். நேற்று முன்தினம், இவரது வீட்டில் மர்ம நபர்கள் 30 பவுன் நகையைக் கொள்ளை அடித்தனர். விளாங்குடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் 29-ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். 30-ம் தேதி திரும்பி வந்தபோது வீட்டில் இருந்து ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. கூடல்நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரையில் சமீப காலமாக தெருவில், குடியிருப்பு பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களை தாக்கி நகைகளைப் பறிப்பது, வெளியூர் செல்வோரின் வீடுகளைக் குறிவைத்து நகை, பணத்தை திருடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவு நடக்கின்றன.
இந்த சம்பவங்களில் ஈடுபடுவோரை போலீஸார் கைது செய்தாலும் மறுபுறம் சங்கிலித் தொடர் போல தொடர்ந்து வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதனால், மாநகர் காவல்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் ரோந்து போலீஸாரை பணியமர்த்தி, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கண்காணிப்பு வளையத்தில் 45 ரவுடிகள்
இதுகுறித்து மாநகர் போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, கடந்த 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடந்த சிறப்பு கண்காணிப்பு தடுப்பு நடவடிக்கையில் மதுரை நகரில் சுப்பிரமணியபுரம், கரிமேடு, திடீர்நகர், திருப்பரங்குன்றம், தெப்பக்குளம், தல்லாகுளம் மற்றும் மதிச்சியம் காவல்நிலையங்களில் 9 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 14 பேரைக் கைது செய்துள்ளோம். மதுரையைச் சேர்ந்த 45 ரவுடிகளிடம் 6 மாதம் வரை குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago