கோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்: வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் மே மாத பரபரப்புகளின்றி வெறிச்சோடிக் கிடப்பதால் சுற்றுலாவை நம்பி வாழும் தொழிலாளர்கள் வேலையிழந்து வாடுகின்றனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு மிதமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும். வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், தேர்வுக்கால விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற காலங்களில் இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

பொதுவாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் காவிரியும், அருவியும் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் முற்றிலும் சரிந்து விட்டது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக் காலமான ஏப்ரல், மே மாதங்களில் பல லட்சம் பேர் ஒகேனக்கல் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி 500-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டுநர்கள், 250-க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளர்கள், 100-க்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் மிதமான வருமானம் கிடைத்த போதும் கோடை விடுமுறை சீசனில் சற்று அதிமாக வருமானம் கிடைக்கும். இதைக் கொண்டு தான் வருமானம் குறைவான காலங்களில் அவர்கள் குடும்பச் செலவை சமாளிக்க வேண்டும்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் கோடை விடுமுறை சீசனுக்கான அறிகுறியே இல்லாத அளவிற்கு ஒகேனக்கல் வெறிச்சோடிக் கிடக்கிறது. இதனால் சுற்றுலாவை நம்பி வாழும் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒகேனக்கல்லைச் சேர்ந்த பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் சிலர் கூறியது :

மாவட்ட நிர்வாகம் சில புதிய விதிகளை அமலாக்கியதைத் தொடர்ந்து அதில் சில தளர்வுகள் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினோம். இதனால், இடையில் சில மாதங்கள் வருமானம் பாதித்தது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்ட நிலையில் தற்போது ஒகேனக்கல் நீரின்றி முழுவதுமாக வறண்டு விட்டது. ஆற்றிலும், அருவியிலும் குளித்து மகிழவும், பரிசல் பயணம், எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளவும், மீன் குழம்புடன் கூடிய உணவை ருசிக்கவும் தான் ஒகேனக்கல் வருவோரில் பெரும்பாலானவர்கள் விரும்பு வர். எனவே, வறண்டு கிடக்கும் ஒகேனக்கல்லை பார்க்க சுற்றுலா பயணிகள் விரும்புவதில்லை. அரிதாக ஒரு சிலர் மட்டுமே வந்து செல்கின்றனர். இதனால் ஒகேனக்கல்லை நம்பி வாழும் தொழிலாளர்களாகிய எங்களுக்கு வருமானம் பாதிக்கப் பட்டுள்ளது.

இயற்கை சூழல் காரணமாக தற்போது வேலையின்றி தவித்து வரும் எங்களுக்கு தற்காலிகமாக வருமானமளிக்கும் வகையில் அரசு சார்பில் குறுகிய கால தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம். ஒகேனக்கல் தொழிலாளர்களுக்கு வேலை யில்லா காலங்களில் தற்காலிக நிவாரணம் வழங்க அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்