சென்னைப் புத்தகக் காட்சி வளாக கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக விற்கப்படுவது தொடர்பாக வாசகர்களின் அதிருப்தியைத் தொடர்ந்து எழுதிவந்தது ‘தி இந்து’. இதைச் சுட்டிக்காட்ட சாம்பார் சாதம், தயிர் சாதம் விலையை உதாரணமாகக் குறிப்பிட்டுவந்தது. இந்நிலையில், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் விலையை மட்டும் ரூ. 10 குறைக்க புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்களான ‘பபாசி’ நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை நம்மிடம் தெரிவித்த ‘பபாசி’யின் செயலர் புகழேந்தியிடம், “ஏனைய உணவுப் பண்டங்களின் விலையையும் குறைத்திருக்கலாமே?” என்று நம் செய்தியாளர் கேட்டபோது, “இப்போது அறிவித்திருக்கும் விலைக் குறைப்பே நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கேன்டீன் ஒப்பந்ததாரர் தெரிவித்தார். நாங்கள் அந்த நஷ்டத்தைப் பகிர்ந்துகொள்கிறோம் என்று சொல்லியே ஏற்கச் செய்தோம்” என்றார் புகழேந்தி.
வாசகர்கள் கருத்து
இந்த விலைக் குறைப்புகுறித்து வாசகர்களிடம் கேட்ட போது, “இந்த விலைக் குறைப்பு வரவேற்கத் தக்கது என்றாலும், போதுமானதல்ல; கண் துடைப்பு நடவடிக்கை போல இதைக் கருதாமல், ஏனைய பண்டங்களின் விலையையும் குறைக்க ‘பபாசி’ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள் அவர்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago