“நளினி விடுதலை யாவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இது குறித்து சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று, நளினியின் தந்தை பி.சங்கரநாராயணன் தெரிவித்தார்.
‘தனது தந்தையும், ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளருமான பி.சங்கரநாராயணன் (90), படுத்த படுக்கையாக அம்பாசமுத்திரம் அடுத்த அம்பலவாணபுரத்தில் இருக்கிறார். அவரை சந்திக்கவும், கடைசி காலத்தில் அவருடன் இருக்க ஒரு மாதம் விடுப்பு (பரோல்) அளிக்க வேண்டும்’ என்று, டிசம்பர் 12-ம் தேதி சிறை அதிகாரிகளிடம் நளினி மனு அளித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டது. நளினி விடுதலையாகவுள்ளது தொடர்பாக, அம்பலவாண புரத்திலுள்ள அவரது தந்தை சங்கரநாராயண னிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “நளினி விடுலையாவதில் மிகுந்த மகிழ்ச்சி. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி” என்றார் அவர். தொடர்ந்து எதையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago