இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறை பிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ள பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த முடியும் என்று கூறி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: பாக் ஜலசந்தி அருகே கடலில் மீன் பிடிக்கும்போது தினசரி ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனவரி 20-ம் தேதி நடைபெற இருந்த அப்பேச்சுவார்த்தை, இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் இருக்கும் அனைத்து இலங்கை மீனவர் களை விடுவிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இது போலவே, இலங்கையில் இருக்கும் 275 மீனவர்கள் மற்றும் அவர்களின் 84 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதுவரை 130 இலங்கை மீனவர்களையும், 7 படகுகளையும் விடுவித்துள்ளோம். இந்நிலை யில், ராமநாதபுரத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க் கிழமை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் துயரத்தையும், கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது.
எனவே, தாங்கள் தனிப்பட்ட முறையில் உடனே தலையிட்டு, அந்த 25 மீனவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் உடனடியாக விடுவிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தை சேர்ந்த மேலும் 64 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் சென்ற 69 படகுகளும் தரப்படாததால் இங்குள்ள அவற்றின் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். அப்போது தான் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago