நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி, இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகிய 2 பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் யோசனைப்படி தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், சனிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட ஆணையர் ஏ.கார்த்திக் இட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர், தலைமைத் தேர்தல் அதிகாரியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றுவார்.
நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அஜய் யாதவ், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் பொதுத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப் படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago