தேர்தல் வரை அம்மா திட்டத்துக்கு தடை: தேர்தல் ஆணையம் பரிசீலனை

By எஸ்.சசிதரன்

தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள அம்மா திட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைப்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையிலான பெயரைக் கொண்டுள்ள அம்மா திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் சேவைகள் அவர்களது பகுதிகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமைதோறும் நேரடியாக சென்று, பொதுமக்களின் குறைகளைக் குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்வதன் மூலமாக, மக்களின் வீடுகளுக்கு அரசு இயந்திரம் தேடிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

33 லட்சம் மனுக்கள்

இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல் மற்றும் பிற கோரிக்கைகள் உள்ளிட்ட 33.13 லட்சம் மனுக்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்கலாமா என்று தேர்தல் ஆணையம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தல் துறை பரிசீலனை

இது குறித்து தேர்தல் துறை வட்டாரங்கள், `தி இந்து' நிருபரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டா , ஓய்வூதியம் உள்ளிட்ட நிதி தொடர்பான நலஉதவிகள் வழங்கப்படுகின்றன. அதன் காரணமாக, இதனை நிறுத்தி வைக்க தமிழக அரசிடம் சொல்லலாமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிக்கைக்குப் பிறகு, இது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “இத்திட்டத்தினை வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் கூறும் என்றே தெரிகிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்