நகரை அழகாக்கி சுகாதாரம் காக்க சுவர்களில் உயிர் பெறும் ஓவியங்கள்: பள்ளிகள் மூலம் மதுரை மாநகராட்சி புது முயற்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தின் கலாச்சார சுற்றுலா நகரங்களில் மதுரைக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர்களின் கலாச் சாரம், பண்பாடு, வரலாற்றுப் பெருமைகளை அறிந்துகொள்ள உலகம் ழுழுவதும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் 7 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு கோடிக்கும் மேலான உள்நாட்டு சுற்றுலாப் பய ணிகளும் மதுரைக்கு வருகின்றனர்.

சமீபகாலமாக மதுரை மாநகர் அரசு பொதுச் சுவர்கள் அரசியல் கட்சிகளின் விளம்பர மையங் களாகவும், கழிவு நீர், குப்பை குவியும் பகுதியாகவும் மாறி யுள்ளன. இதனால் மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தனர்.

இதையடுத்து, மதுரையை பசுமை யான, தூய்மையான, அழகான நகராக்கவும், பொது இடங்களை பொதுமக்களே சுத்தமாக வைத் துக்கொள்ளவும் தூய்மை மதுரை இயக்கத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற் கொண்டுள்ளது.

இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சுகாதார விழிப் புணர்வை ஏற்படுத்த, அவர் களைக் கொண்டே பொதுச்சுவர் களில் மதுரையின் கலாச்சாரப் பெருமைகளை விளக்கும் ஓவி யங்கள், பசுமை, சுற்றுச்சூழல், சுகாதாரம் விழிப்புணர்வு ஓவியங் களை வரையவும் மாநகராட்சி புது முயற்சி மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் பொதுச் சுவர்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகளை கொண்டு கண்கவர் ஓவியங்கள் வரையும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பசுமை மதுரை

இந்தப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை உணர்த்துவதாக இருந்தன.

குறிப்பாக, நீங்கள் அழிப்பது என்னை அல்ல, அடுத்த தலை முறையை, இப்படிக்கு மரம் என்பதை மரமே உணர்த்துவது போன்ற ஓவியம், நமது இந்தியா நமது கையில், சுகாதார பள்ளி, பசுமை மதுரை உள்ளிட்டவற்றை மையப்படுத்தி பள்ளி குழந்தை கள் வரைந்த அழகிய ஓவியங்கள் காண்போரைப் பிரமிக்க வைத்த தோடு சுவர்களுக்கும் புத்துயிர் கொடுப்பதாய் அமைந்திருந்தன.

ஓவியப் போட்டிகள் மூலம்

மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: வெளிநாடுகள் சுத்தமாக இருப்பதற்கு காரணம் பள்ளி பருவத்தில் இருந்தே, அங்கு உள்ள குழந்தைகளிடம் இருக்கும் தூய்மை குறித்த விழிப்புணர்வுதான். அதனால், மதுரை மாநகராட்சியில் தூய்மை, பசுமை பிரச்சாரத்தை மாணவர்களிடம் இருந்து இந்த ஓவியப் போட்டிகள் மூலமே தொடங்கி உள்ளோம். இந்த ஓவியங்களை வரைவது, அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்துவது உள்ளிட்டவை பள்ளிக் குழந்தைகளின் ஓவியத் திறமையை வெளிப்படுத்தவும், அவர்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறோம். மதுரை மாநகர் முழுவதும் பொதுச் சுவர்களில் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து இது போன்ற ஓவியங்களை வரைந்து மதுரையை அழகாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக மதுரையின் முக்கிய வழிப்பாட்டுத் தலங்கள், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் செல்லும் இடங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்கூடங்கள், பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள பொது சுவர்களில் ஓவியங்களைத் தீட்டவும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்