தொழிலதிபர்களின் உதவியால் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படும்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தொழிலதிபர்களுடன் இணைந்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு களை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் பங்களிப்போடு மேம்படுத்துவது தொடர்பான விளக்கக் கூட்டம் நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்தது.

இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், பெரும் புதூர் எம்பி ராமச்சந்திரன், அம்பத் தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் கார் மேகம், ‘சிட்கோ’ முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வேணு, முன்னாள் தலைவர் ராஜீ, தொழிலதிபர் ஜெய ராமன், நடிகர் தாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பேசிய மக்கள் பிரதிநிதிகள், கல்வி மற்றும் ஒழுக் கத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தனர். மேலும் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த தொழிலதிபர்கள் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து இந்தக் கோரிக் கைகளை ஏற்ற அம்பத்தூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தி னர், அரசுப் பள்ளிகளுக்கு எதுதேவை என்றாலும் தாங்கள் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. அந்த அடிப்படையில், இந்தியா விலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் பள்ளிக்கல்வி துறைக்கு இந்தாண்டு 26,892 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், புதிய பள்ளிக் கட்டிடங்கள் நபார்டு வங்கி திட்டம் மற்றும் எஸ்எஸ்ஏ திட்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், மக்கள் மற்றும் மாணவர்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டியுள்ளது.

தொழிலதிபர்கள் உறுதி

அரசுப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடிக் கொண்டு வருவதால், அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தி யாளர்கள் சங்கத்தினரை நாடினோம். கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நிறை வேற்றுவோம் என அவர்கள் தெரி வித்துள்ளனர்.

தொழிலதிபர்களுடன் இணைந்து அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் முதல் கட்டமாக அம்பத்தூரில் தொடங்கியுள்ளது. இந்தப் பணி தமிழகம் முழுவதும் சிறக்கப் போகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை, மற்ற தேவைகள் 90 சதவீதம் முடிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக 36 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், 5 ஆயிரம் பள்ளி களில் கழிப்பிட வசதிகள் உள்ளன. ஆனால், அவை குடிநீர் வசதி உள் ளிட்டவை அடங்கிய நவீன கழிப்பிட வசதிகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே ஒருவார காலத்தில் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களோடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலதிபர்கள் கலந்து பேசி எந்த எந்த பகுதியில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் செய்வது குறித்து, முடிவு எடுத்து, உதவிகரம் நீட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்