பிரமிக்க வைக்கும் உலக தமிழ்ச்சங்க நூலகம் ‘குளுகுளு’ வசதியில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் செயல்படாமல் முடங்கிக்கிடந்த உலக தமிழ்ச்சங்க நூலகம் தற்போது குளு குளு வசதியுடன் பல்லாயிரக்கணக்கான நூல்களுடன் பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும் வகையில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இதனால், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதி களவில் நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கி உளளனர்.

மதுரையில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மாநகராட்சி அலுவலகம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் உலக தமிழ்ச்சங்கக் கட்டிட வளாகத்தில் அமர்ந்து படித்தனர். மழை, வெயில் காலங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் ஒதுங்கக் கூட இடமின்றி மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

காந்தி அருங்காட்சியகத்தில் கடந்த ஆண்டு போட்டித்தேர்வு மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இவர்கள் உலக தமிழ்ச்சங்க வளாகத்துக்கு இடம் பெயர்ந்தனர்.

உலக தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் இலக்கி யவாதிகள், பொதுமக்கள் வாசிப்புக்காக மட்டுமே நூலகம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்த நூலகத்தில் தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாண வர்கள் எதிர்பார்க்கும் ஆய்வுக்குரிய நூல்கள் இல்லாததால் யாருமே வராமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. தினமும் 10 பேருக்கு மேல் வந்தாலே அதிசயம்தான். அதேநேரத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இடமின்றி தவித்து வந்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மதுரை ஆட் சியராக நாகராஜன் நியமிக்கப்பட்டார். தான் இடமாற்றம் செய்யப்படுவதற்கு சில நாட் களுக்கு முன் ஆட்சியர் உலக தமிழ்ச்சங்கக் கட்டிடத்தைப் பார்வையிட வந்தார். அப்போது வெயிலில் அமர்ந்து படித்த மாணவர்களைப் பார்த்தார்.

அதேநேரத்தில் உலக தமிழ்ச்சங்க நூலகம் வாசிப்பாளர்கள் வராமல் வெறிச் சோடிக் காணப்பட்டது. நூலகர் மட்டுமே அமர்ந்திருந்தார். உடனே ஆட்சியர் நாகராஜன், போட்டித்தேர்வு மாணவர்களை தமிழ்சங்க நூலகத்தில் அமர்ந்து படிக்க அனுமதி வழங்கி நூலகத்திலுள்ள நூல்களையும் அவர்கள் பயன்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து தினமும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இந்த நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் இலக் கியம், ஆன்மிகம், சிறுகதைகள், நாவல், போட்டித்தேர்வுக்கான நூல்கள் என்று சுமார் 18 ஆயிரத்து 650 நூல்கள் உள்ளன. முன்பு உலக தமிழ்ச்சங்க நூலகம் வாசிப்பாளர்கள் வராமல் நூல்கள் சரியாக அடுக்கப்படாமல் தூசி படிந்து காணப்பட்டது.

தற்போது குளிரூட்டும் இயந்திரங்கள் பொருத்தி குளு குளு வசதியுடன் நூலகம் புதுப்பொலிவோடு காணப்படுகிறது. இந்த நூலகத்துக்கு தற்போது வருகை தரும் போட்டித்தேர்வு மாணவர்கள், தமிழ் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நூலகர் வேல்விழி கூறுகையில், ‘‘தினமும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித்தேர்வுக்குப் படிக்க வருகின்றனர். நூல்களை வெளியே எடுத்துச் சென்று படிக்க முடியாது. உலக தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கிய நூலகம், தற்போது போட்டித்தேர்வு மாணவர்களுக்காகப் பயன்படுகிறது. ஆனால், பெரும்பாலான நூல்கள் தமிழ் வளர்ச்சி சார்ந்துள்ளதால் மாணவர்கள் வரும்போதே நூல்களை எடுத்து வருகின்றனர். இந்த நூலகம் முழுக்க முழுக்க தமிழ் ஆய்வு, தமிழ் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுக்காக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த பிரம்மாண்ட நூலகம் அமையும் வரை, இந்த நூலகம் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ரூ.6 கோடி பிரம்மாண்ட நூலகம் என்னாச்சு?

கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மதுரை உலக தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் ரூ.6 கோடியில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். அந்த நூலகத்தில் குழந்தைகளுக்கு தனிப்பிரிவு, போட்டித்தேர்வு பயிற்சி மையம், நூல் வாசிப்புப் பிரிவு ஆகியன இடம்பெறும் என்று அறிவித்தார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல், மதுரையில் உலக தமிழ்ச்சங்க நூலகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தபடி தற்போது வரை அந்த பிரம்மாண்டமான நூலகம் இன்னும் அமையவில்லை. அப்படி நூலகம் அமைந்தால் தென் மாவட்டத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்