அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூறாகப் பேசியதுடன், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பி.அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.
கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்தவர், டாக்டர் கஜேந்திரன். இவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பி.அசோகன் விபத்துப் பிரிவுக்கு மாற்றிவிட்டு, அவர் பணியாற்றி வந்த இடத்துக்கு டாக்டர் கஜேந்திரனை விட பணி அனுபவத்தில் இளையவரை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னை மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் அசோகனிடம் டாக்டர் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அதை முதல்வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, டாக்டர் கஜேந்திரன் அனுமதி வாங்கி விடுப்பில் சென்றார். இந்நிலையில் இந்திய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக முதல்வர் அசோகன் புகார் அளித்து, அவரை இடமாறுதல் செய்துள்ளார். மேலும் அவரது பணியிடத்திற்கு வேறு மருத்துவரையும் நியமித்துள்ளார்.
இதனால் கடந்த 8 மாதங்களாக பணியிடமின்றி இருந்துள்ளார், டாக்டர் கஜேந்திரன். 'இதையடுத்து பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டதாகவும், தன்னை அவதூறாக பேசி அவமானப்படுத்தியதாகவும், அரசு மருத்துவமனை முதல்வர் பி.அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டாக்டர் கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்த விசாரணை கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு இருவரிடமும் விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணையை, ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்து, முதல்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டார்.
இது குறித்து டாக்டர் கஜேந்திரன் கூறும்போது, 'முதல்வர் அசோகன் என்னை இழிவுபடுத்தியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டார். மேலும் பணிக்கு முறையாக வரவில்லை எனப் பொய்யாக புகார் அளித்தார். எனது வருகைப் பதிவிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் பணியைத் தொடர முடியாத நிலையில் உள்ளேன். என்னைப் போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.அசோகனிடம் கேட்டபோது, 'மருத்துவமனையில் யாரை எங்கு பணியமர்த்துவது என்பது நிர்வாகம் சார்ந்த முடிவு. விசாரணை குறித்து எதுவும் கூற முடியாது' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago