தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு செயற்கை மழை தீர்வாகுமா என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மனிதன் உயிர்வாழ்வதற்கான அடிப்படை ஆதாரமாக நீர் விளங் குகிறது. இந்த பேரண்டத்தில் பூமி கோளில் மட்டுமே நீர் இருப்பதாக இன்றுவரை அறியப்படுகிறது. மற்ற கோள்களிலும் நீர் உள்ளதா என ஆராய்ச்சிகள் தொடர்கின் றன.
தண்ணீர் தேவை அதிகரிப்பு
பூமியில் மக்கள்தொகையும், அவர்களுக்கான தண்ணீர் தேவை யும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தில் கவனம் செலுத்தப்படுவது இல்லை. அதன் பிரதிபலிப்பே இன்று நாம் காணும் தண்ணீர் தட்டுப்பாடு.
இந்த நிலையில், தமிழகத் தில் செயற்கை மழை பெய்ய வைப் பதற்கான ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள் ளார்.
தமிழகத்துக்கு செயற்கை மழை புதிது அல்ல. இங்கு வடகிழக்கு பருவமழை பொய்த் துப்போன ஆண்டுகளில், அதன் தொடர்ச்சியாக செயற்கை மழை குறித்த பேச்சு எழுந்துள்ளது. பலமுறை பரிசோதித்தும் பார்க் கப்பட்டுள்ளது.
1973 மற்றும் 1975-77 கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட் டத்தில் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இந்திய வெப்ப மண்டல வானிலை நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித் துள்ளது.
செயற்கை மழை குறித்து வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியதாவது:
சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் துணை தலைமை இயக்குநர் ஒய்இஏ ராஜ்:
தமிழகத்தில் 1974-ல் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. அதைத் தொடர்ந்து, 1975-ல் தென்மேற்கு பருவகாலத்தில் செயற்கை மழை பெய்விக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையமும் மேகக்கூட்டங்கள் தொடர்பான ரேடார் விவரங்களை வழங்கி உதவியது. 1984-87 கால கட்டத்திலும் முயற்சி நடந்தது. ஆனால், பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
மேகக்கூட்டம் இருந்தால் மட்டுமே
செயற்கை மழை தொடர்பான ஆய்வுகள், பரிசோதனைகளை புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேகக் கூட்டங்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற முயற்சிகளை மேற் கொள்ள முடியும். தெளிவான வானத்தில் இது சாத்தியம் இல்லை.
சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்கு நர் எஸ்.பாலசந்திரன்:
செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சியில் வானிலை ஆய்வு மையம் ஈடுபடுவதில்லை. இந்திய வானிலை ஆய்வு மைய உத்தரவின் பேரில் ரேடார் உள்ளிட்ட தகவல்களை மாநில அரசுகளுக்கு வழங்குவது மட்டுமே எங்கள் பணி.
செயற்கையாக மழை பெய்ய வைக்க வேண்டும் என்றாலும், முதலில் மேகக்கூட்டங்கள் இயற் கையாக உருவாக வேண்டும். அதன் பின்னர் ரேடார் கருவிகள் மூலமாக மேகத்தின் அளவு கணக்கிடப்படும். தொடர்ந்து சில்வர் அயோடைடு, சமையல் உப்பு போன்ற பொருட்கள் விமானம் மூலமாக மேகக்கூட்டங்களில் தூவப்படும்.
சிதைவுறும் பொருட்கள் சிறு துகள்களாக மாறி, மேகக் கூட்டத் தில் உள்ள சிறு சிறு நீர் துளிகளு டன் இணைந்து, பெரிய நீர்திவலை களை உரு வாக்கி மழையாக பெய்ய வைக்கப்படும். வெவ்வேறு நாடுகள், நிறுவனங்களில் இந்த நடைமுறை மாறக்கூடும்.
இவ்வாறு ரசாயனப் பொருட் களை பயன்படுத்துவதன் மூலம், வழக்கத்தைவிட அதிக மழை பெய்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை.
இவ்வாறு வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago