தமிழகத்தில் பெரம்பலூர், தரும புரி, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட் டங்களில் ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சரிந்துள்ளது. அதே நேரம் கடலூர், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் பெண் குழந் தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், கடந்த 1961-ம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தை களுக்கு 976 பெண் குழந்தைகள் இருந்தன. 50 ஆண்டுகளுக்கு பிறகு, 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் 918 ஆக குறைந்தது. தமிழகத்தில் 1961-ல் 995 ஆக இருந்த பெண் குழந்தைகள் விகிதம் படிப்படியாக குறைந்து 2011-ல் 943 ஆக குறைந்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் பெண் குழந்தைகள் விகிதம் குறைவதை கருத்தில் கொண்டு, ‘பெண் குழந் தையை பாதுகாப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015 ஜனவரி 22-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள, ஆண் - பெண் குழந்தைகள் விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் மட்டும் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டது.
பின்னர், தமிழகத்தின் சரா சரியைவிட பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக இருந்த அரியலூர், சென்னை, தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருச்சி, திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங்களுக் கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டது.
இத்திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் ஒவ்வொரு மாவட்டத்துக் கும் மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பெண் குழந் தைகள் எண்ணிக்கையை அதிகரிப் பதற்கான பணிகளில் சுகாதாரம், சமூகநலம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், தமிழகத்தில் ஆண் - பெண் குழந்தைகள் விகி தம் தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
பெரம்பலூரில் 1,000 ஆண் குழந் தைகளுக்கு நிகரான பெண் குழந் தைகள் எண்ணிக்கை 2016-17-ல் 977 ஆக இருந்தது. அது 2017-18-ல் 911 ஆக குறைந்துள்ளது. இதேபோல, அரியலூரில் 953-ல் இருந்து 933, தருமபுரியில் 939-ல் இருந்து 899, நாமக்கல்லில் 942-ல் இருந்து 921, சேலத்தில் 973-ல் இருந்து 971, திருவண்ணாமலையில் 933-ல் இருந்து 914, விழுப்புரத்தில் 959-ல் இருந்து 931 என 7 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
அதேநேரம், சென்னையில் 939-ல் இருந்து 952, கடலூரில் 931-ல் இருந்து 956, திருவள்ளூரில் 959-ல் இருந்து 973, திருச்சியில் 957-ல் இருந்து 959 என பெண் குழந்தைகள் விகிதம் அதிகரித் துள்ளது.
இதுபற்றி சமூகநலத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கல்வி மேம்பாடு உட்பட பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின் றன.
கருக் கலைப்பில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது சுகாதாரத் துறையினர் கடும் நட வடிக்கை எடுத்து வருகின்றனர். ஸ்கேன் மையங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய நடவடிக்கைகளால், மற்ற மாநிலங்களைவிட தமிழகத் தின் நிலை திருப்திகரமாக உள் ளது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதால், படிப்படியாக பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் உயரும் என நம்புகிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago