காரைக்காலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியருக்கு 10 ஆண்டு சிறை  

By வீ.தமிழன்பன்

கரைக்காலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே சேத்தூரில் தனியார் ஆங்கில உயர்நிலைப் பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவரை தனியறைக்கு அழைத்துச் சென்று தலைமையாசிரியர் கே.பக்கிரிசாமி(52) தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது பாலியல் ரீதியாக தகாத முறையில் அந்த சிறுமி நடத்தப்பட்டுள்ளது குறித்து தெரிய வந்தது.

இதுகுறித்து பெற்றோர்கள் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி தலைமையாசிரியர் வரிச்சிக்குடியைச் சேர்ந்த கே.பக்கிரிசாமியை கடந்த 2017-ம் ஆண்டு ஆக.20-ம் தேதி கைது செய்தனர்.
  
இதுதொடர்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (வியாழக்கிழமை) விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பக்கிரிசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6  மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து தண்டனைப் பெற்ற தலைமை ஆசிரியர் பக்கிரிசாமியை போலீஸார் புதுச்சேரி மத்தியில் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்