புதுச்சேரியில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் இருந்த வாஷிங் மெஷினில் சிக்கியிருந்த 5 அடி நீளமுள்ள பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). ரயில்வே துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், சார்லஸ் மனைவி துணி துவைப்பதற்கான வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் இயக்க முயற்சித்துள்ளார். சுவிட்ச் போட்டபோது வாஷிங் மெஷின் ஓடவில்லை.
உடனே இதை தனது கணவர் சார்லஸிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சார்லஸ் டார்ச்லைட் அடித்து வாஷிங் மெஷின் உள்புறம் பார்த்தார். அப்போது வாஷிங் மெஷின் உள்பகுதியில் பாம்பு ஒன்று சுருட்டிக்கொண்டு கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ் புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே வனத்துறை ஊழியர்கள் கோபி, செந்தாமரைசெல்வன் ஆகியோர் பாம்பு பிடிக்கும் கருவியுடன் சார்லஸ் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு வாஷிங் மெஷின் மெக்கானிக் உதவியுடன் வாஷிங் மெஷினைக் கழற்றி, உள்புறம் இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்தனர். வெளியே எடுத்துப் பார்த்த போது அந்தப் பாம்பு, சுமார் 5 அடி நீளம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பாம்பை வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago