சேலம் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து, வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
சேலம், கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டியில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை உள்ளது. அந்த சிலையை நேற்று முன் தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து வெள்ளாளப்பட்டியில் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். தவகலறிந்து வந்த கருப்பூர் போலீசார், அம்பேத்கர் சிலை உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை சம்பவ இடத்திற்கு வந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தார். அப்போது, இரண்டு வாலிபர்கள் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். போலீஸார் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அம்பேத்கர் சிலை உடைப்பு பிரச்சினை சம்பந்தமாக சேலம் - பெங்களூரு சாலையில் விடுதலை சிறுத்தை அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், சேலம் - பெங்களூரு நெடுங்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக வெள்ளாப்பட்டியை சேர்ந்த பசுபதி(22), அருண்(21) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படங்கள்: எஸ்.குருபிரசாத்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago