அழகிரி நடத்திய பேரணியும் கட்சியினரின் கருத்துகளும்! 

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்திய பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என திமுக மட்டுமின்றி, மாற்றுக்கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இதை அழகிரி ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர்.

மு.க.அழகிரி சென்னையில் நேற்று நடத்திய அமைதிப் பேரணி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளி டம் விவாதத்தை ஏற்படுத்தி உள் ளது. திமுகவின் முக்கிய நிர்வாகி கள் யாரும் இந்தப் பேரணியில் பங்கேற்காதது மட்டுமின்றி, பேரணி யில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்ததால் அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத அழகிரியின் நெருங்கிய ஆதரவா ளர் ஒருவர் கூறியதாவது:

சென்னை பேரணிக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாதது ஏமாற்றம்தான். கடும் வெயில், தென் மாவட்டங்களில் இருந்து தாமதமாக வந்த வாகனங் கள், சரியான ஒருங்கிணைப்பு இல்லா தது, வாகனச் செலவைக்கூட அழகிரி தரப்பினர் ஏற்றுக் கொள்ளாதது போன்ற பல்வேறு காரணங்களால் கூட்டம் சேரவில்லை.

கருணாநிதியின் நினைவிட பகுதி யில் முன்பே சென்று சில ஆயிரம் பேர் நின்று கொண்டனர். பேரணியில் கூட்டம் சேராதது ஒருபக்கம் ஏமாற் றம் என்றாலும், மறுபக்கம் பரவா யில்லை என்று மனதை தேற்றிக் கொண்டோம். மதுரை முதலிடம், புதுக்கோட்டைக்கு 2-ம் இடம், தஞ்சாவூர் 3-ம் இடம் என்ற வரிசைப் படி கூட்டம் சேர்ந்தது. கருணா நிதி பெயரில் மாநில அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்தும் திட்டமும் உள்ளது. எதிர்காலத்தில் சென்னை யில் தலைமையகம், மாவட்ட அளவில் கிளைகளை உருவாக்கி செயல்படுவோம் என்றார்.

மதுரை மாநகர் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஒருவர் கூறிய தாவது:

அழகிரியின் பேரணியால், மதுரை மாநகர் மாவட்ட திமுகவில் சிறு சலசலப்பு கூட இல்லை. இந்தப் பேரணி அழகிரியுடன் எப்போதும் இருக்கும் 10, 20 பேர் ஏற்பாடு செய்த கூட்டம்தான். அவர்களுக்கும் திமுகவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. பேரணிக்கு வந்த கூட்ட மும் மிகக் குறைவு. அவர்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பே இல்லை. எங்கிருந்தோ சிலரை அழைத்து வந்துள்ளனர்.

மதுரை மாநகர் திமுக துணை அமைப்பாளரான வேலம்மாள் என்பவர் மட்டுமே சென்றுள்ளார். திமுகவில் புள்ளி ஒரு சதவீதம் (0.1) ஆதரவு கூட அழகிரிக்கு இல்லாதது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவரால் கூட்டத்தை திரட்டவும் முடியாது. இந்தப் பேரணியால் திமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அழகிரி பேரணி தோல்வி அடைந்ததால் திமுக தலைமை மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மதுரை மாநகர் அமமுக நிர்வாகி வெற்றிப்பாண்டியன் கூறியதாவது:

கூட்டம் மிகக்குறைவாகவே இருந் துள்ளது. இந்த ஒரு நாளுடன் இவரது செல்வாக்கு முடிந்துவிட்டதாகவே திமுக தலைமை கருதுகிறது. எந்த சூழலிலும் திமுக தலைமை முக. அழகிரியை ஏற்றுக் கொள்ளாது. அதை மீறி அழகிரியை திமுகவில் சேர்த்துக் கொண்டால் பல மாவட்டச் செயலாளர்கள் வெளியேறி விடுவர் என ஸ்டாலின் பயப்படுவதிலும் உண்மை இருக்கிறது என்றார்.

மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் புதூர் பூமி நாதன் கூறியதாவது:

கூட்டம் அதிகமில்லை என அறிந்தேன். வந்தவர்களும் அழகிரி திமுகவில் இணைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் வந்திருப்பார் கள். அழகிரி பெரிய கூட்டமே சேர்த்தாலும் திமுகவில் எந்த பாதிப் பையும் ஏற்படுத்த முடியாது. ஏற் கெனவே பல தேர்தல்களில் தொடர்ந்து எதிர்த்துதான் பணி யாற்றுகிறார். என்ன பாதிப்பு வந்து விட்டது? அவரை சேர்ப்பது திமுக உள் விவகாரம் என்றார்.

ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:

சென்னை அழகிரி பேரணியில் ஓரளவு கூட்டம் சேர்ந்துள்ளது. இதனால் திமுகவுக்கு பாதிப்பு நிச்சயம். கடந்த பல தேர்தல்களில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி பிடிஆர்.பழனிவேல்ராஜன் உட்பட பலரது தோல்விக்கு அழகிரி காரண மாக இருந்துள்ளார். இந்த நிலை வரும் தேர்தல்களிலும் தென் மாவட் டங்களில், குறிப்பாக மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிக ளிலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்றார்.

மு.க.அழகிரியின் ஆதரவாள ரான முன்னாள் மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன் கூறியதாவது:

பேரணியில் 1.50 லட்சம் பேர் பங் கேற்றனர். நல்ல ஆதரவு காணப் பட்டது. பங்கேற்றவர்களும் எழுச்சி யுடன் காணப்பட்டனர். நாங்கள் தனி இயக்கம் இல்ல. அழகிரி விடுத்த அழைப்பின்பேரில், அவர் மேல் உள்ள பற்று, பாசத்துக்காக வந்த கூட்டம்.

இது யாராலும் அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. மாறாக தானாக சேர்ந்த கூட்டம், மாநிலத்தின் அனைத்து பகுதி களில் இருந்தும் ஆதரவாளர் கள் வந்திருந்தனர்.

கூட்டம் சேர்ப்பது இன்று சாதாரண காரியமல்ல. முக்கிய கட்சிகளின் மாநாட்டுக்கே கூட்டம் சேர்க்க முடியாத நிலை மையே இன்று உள்ளது.

பெரிய வெற்றியை பெற்ற அமைதிப் பேரணியில் அழகிரியின் செல்வாக்கை பார்த்த பிறகாவது திமுக தலைமை தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்