மக்களுக்கு அதிகாரத்தை உணர்த்தும் கேடயம்; கிராமசபையை புத்துயிர் பெற செய்யும் மக்கள் நீதி மய்யம்: நல்ல மாற்றங்கள் நடக்க அக்டோபர் 2-ல் கேள்வி கேளுங்கள் என அழைப்பு

By மகராசன் மோகன்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்வாகத்தை வலியுறுத்திவரும் மக்கள் நீதி மய்யம், மக்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்களாட்சியில் தங்களுக்கு இருக்கும் அதிகாரம் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்துவதே கிராமசபைக் கூட்டம். எனவே,அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடத்துவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய 4 நாட்களும் நாடு முழுவதும் கட்டாயம் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கூறுகிறது. இந்த ஆண்டின் இறுதி கிராமசபைக் கூட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுக்க அந்த நாளில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவதை கண்காணிக்குமாறு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அதன் தலைவர் கமல்ஹாசன். ‘உயிர்பெறும் கிராமசபை.. உயிர்த்தெழ வைக்கும் மக்கள் நீதி மய்யம்’ என்ற கருத்தை முன்வைத்து மக்கள் நீதி மய்யம் இதை செயல்படுத்துகிறது.

இதுகுறித்து கேட்டபோது, மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:

ஆண்டில் 4 நாட்களுக்கு கிராமசபைக் கூட்டம் நடக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது முறையாக செயல்படுத்தப்படாமல், ஆரோக்கியம் இழந்து உயிரற்றுப் போயிருப்பதாக கமல்ஹாசன் கருதினார். கிராமசபைக் கூட்டங்கள் நடக்கும் இடங்களிலும், பெயரளவுக்கு கூட்டத்தைக் கூட்டி,வெறுமனே கையெழுத்து வாங்கி கணக்கு காட்டும் நடைமுறையே பரவலாக காணப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் தொடங்கிய பிறகு, கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘மாதிரி கிராமசபைக் கூட்டம்’ நடத்தி, சில முடிவுகள் எடுக்கப்பட் டன. அதன் அடிப்படையில் மே 1-ம் தேதி முறை யான விழிப்புணர்வோடு, கிராமங்களை தத் தெடுத்து பணியாற்றுவது போன்ற விஷயங் களில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.அடுத்து, ஆகஸ்ட்டில் ‘மக்களின் அதிகாரத்தை மக்களுக்கே உணர்த்தும் கேடயம் கிராமசபை’ என்ற கொள்கையோடு களத்தில்இறங்கினோம்.

அடுத்த செயல்திட்டம் என்ன?

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை வேண்டாம் என்ற கருத்து மக்களிடம் இருக்கிறது. ஆனால், அந்த எதிர்ப்பை முறைப்படி பதிவு செய்யும் வழிமுறைகள் பலருக்கு தெரிவதில்லை. ஆகஸ்ட்டில் அனைத்து ஊர்களிலும் கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டிருந்தால், பசுமைவழிச் சாலையை எதிர்த்து அதிலேயே தீர்மானம் கொண்டு வந்து, நேரடியாக மத்திய அரசு வரை கவனிக்க வைத்திருக்கலாம். இதுபோல மக்கள் ஏதாவது செய்துவிடுவார்கள் என்பதாலேயே, கிராமசபைக் கூட்டங்களுக்கு அரசுகள் அதிக முனைப்பு  காட்டுவதில்லை. ஆனால், மக்கள் நீதி மய்யம் இதை விடப்போவதில்லை. அதிகாரமிக்க கிராமசபையை உயிர்ப்பிக்கும் வேலையை தற்போது மக்கள் நீதி மய்யம் செய்து வருகிறது.

ஒரு பஞ்சாயத்தில் குறிப்பிட்ட அந்த மாதங்களில் என்னென்ன திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன? அடுத்து என்ன செய்ய உள்ளனர்? வரவு செலவு கணக்கு சரியாக இருக்கிறதா? வீண் செலவுகள் செய்யப்படுகிறதா? கிராமத்தில் என்னென்ன கட்டிடங்கள் வர உள்ளன? பொய் கணக்கு காட்டப்பட்டிருக்கிறதா.. இப்படி எல்லா கேள்விகளையும் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் எழுப்பலாம். ஆராயவும் செய்யலாம். அதை ஊக்குவிக்கும் பணியைத்தான் தற்போது முன்னெடுக்கிறோம்.

பயத்தை ஏற்படுத்துவோம்

கிராமசபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்துவது, அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாகவே கருதப்படுகிறது. கண்டிப்பாக தொடர்ந்து அரசுக்கு பயத்தை ஏற்படுத் தவே செய்வோம். லஞ்சம், ஊழல் போன்ற தீய சக்திகள் ராட்சதக் கட்டிடங்களாக உயர்ந்து நிற்கின்றன. நல்ல விஷயம் செய்வதற்காக, தீய சக்திகளை வீழ்த்த முற்படும்போது, அந்த ராட்சதக் கட்டிடங்கள் உடனே உடை யாது. தற்போது, அந்த கட்டிடத்தில் அச்சம் என்ற விரிசல் விழுந்திருக்கிறது. இன்னும் மக்கள் பக்கம் நின்று பல வேலைகள் செய்யவேண்டி இருக்கிறது.

மாவட்ட ஆட்சியர்கள் ஆர்வம்

ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த முறை ஆட்சியர்கள் கவனத்துடன் இருந்து, கிராமசபைக் கூட்டங்களைப் பார்வையிட ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அது மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களுக்கான அதிகாரத்தை மக்களுக்கேஉணர்த்தும் கேடயமான கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடந்து, மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினாலே போதும்.. இங்கு பல நல்ல மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிடும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதற்குத்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்