கேரளாவில் எலிக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழக எல்லையில் உள்ள 20 வாகன சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. வாகனங் களுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல், பொது மக்கள் மற்றும் கால்நடைகளைப் பரிசோதித்தல் உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கேரளாவில் கடந்த 100 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அம்மாநிலம் வெள்ளத்தில் மிதந்ததுடன் மிகப் பெரிய பாதிப்பும் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க அம்மாநிலம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் இருந்து இந்நோய் தமிழ்நாட்டுக்கும் பரவும் அபாயம் இருப்பதால், அதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்துள்ளது. அதையும் மீறி சிலர் நோய் தாக்குதலுக்கு உயிரிழந்ததாக தெரிகிறது.
இதையடுத்து பொது சுகாதாரத் துறையும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கால் நடை பராமரிப்புத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
எலியின் வயிற்றில் வளரும் லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியா மூலம் எலிக் காய்ச்சல் பரவுகிறது. எலியின் சிறுநீர் மூலம் பன்றி, பூனை, ஆடு போன்ற கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவும். கால்நடைகளுடன் நேரடித் தொடர்புடைய மக்களையும் இந்நோய் தாக்கும். தொடக்கத்தில் சாதாரண காய்ச்சலாகத்தான் தொடங்கும். பின்னர் கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல் ஏற்படும். பின்னர் சிறுநீரகம், கல்லீரல் பாதித்து மஞ்சள் காமாலை வரும். வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற் படும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் உடல் உறுப்புகள் செயலி ழந்து உயிரிழப்பும் ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் இருந்து ஏராள மானோர் தொழில் மற்றும் சொந்த காரணங்களுக்காக கேரளாவுக்குச் செல்கின்றனர். அவ்வாறு சென்ற வர்கள் அங்கிருந்து மீண்டும் தமிழகம் திரும்பும்போது உடல் நிலையை பரிசோதித்து, எலிக் காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தமிழக எல்லையில் உள்ள 20 வாகன சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் களியக் காவிளை, நெல்லை மாவட்டம் புளியரை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, போடி மெட்டு, லோயர் கேம்ப் (தற்காலிகமானது), திருப்பூர் மாவட்டம் அமராவதி, கோவை மாவட்டம் வாளையாறு, ஆனைக்கட்டி, வேலந்தாவளம், மேல்பவி, முள்ளி, மீனாட்சிபுரம், நடுப்புன்னி, கோபாலபுரம், நீலகிரி மாவட்டம் நம்பியார் குன்னு, தாலூர், சோளடி, புலகுன்னூர், நடுகனி, பட்டவாயல் ஆகிய இடங் களில் உள்ள சோதனைச் சாவடி களில் அதற்கான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதன்படி அனைத்து வாகனங் களின் டயர்களில் கிருமிநாசினி மருந்து தெளித்த பிறகே தமிழ்நாட் டுக்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அவர் களில் சிலர் எடுத்துவரும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிக ளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
எலிக் காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொது சுகா தாரத் துறையும், தமிழ்நாடு கால் நடை பராமரிப்புத் துறையும் இணைந்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதுடன் ஆங்காங்கே முகாம்களும் நடத்தப்படுகின்றன. மேலும் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு எடுத்து வரப்படும் கால்நடைகளுக் கும் எலிக் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய் அறிகுறி இருந்தால் அந்த கால்நடையை தனிமைப்படுத்துவதுடன் தினசரி சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago