பெட்ரோல், டீசல் விலை நாள் தோறும் உயர்ந்து வருவதால் உற் பத்தி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை உயரக்கூடும் என்று பொரு ளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நேற்றைய நில வரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.13, டீசல் விலை ரூ.78.36. நாள்தோறும் விலை உயர் வதால், அத்தியாவசியப் பொருட் களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 1998-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.23.94 மட்டுமே. இந்த 20 ஆண்டுகளில் 238 சதவீதம் உயர்ந்துள்ளது. சரா சரியாக, ஆண்டுக்கு 12 சத வீதம் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண் ணெய் விலை உயர்வு, இறக்குமதி, போக்குவரத்து கட்டணம், மத்திய கலால் வரி, மாநில வாட் வரி, டீலர் கமிஷன் எல்லாமாக சேர்ந்து பெட்ரோல், டீசல் விலையை தாறு மாறாக உயர்த்துகின்றன.
உலகின் பல நாடுகளிலும் பெட் ரோல், டீசல் விலை உயர்ந்திருக் கிறது. ஆனால், இந்தியா அளவுக்கு இல்லை. அண்டை நாடான பாகிஸ் தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.62, டீசல் ரூ.62.70. இலங்கை யில் ரூ.70.65, ரூ.53.98, சீனாவில் ரூ.80.03, ரூ.71.46, பூடானில் ரூ.64.14, ரூ.62.10 நேபாளத்தில் ரூ.70,05, ரூ.61.30, வங்கதேசத்தில் ரூ.76.32, ரூ.55.74 ஆக இருக்கிறது. இந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தி யாவில்தான் விலை அதிகம் என் பது வேதனையான உண்மை.
இதுகுறித்து இத்துறை சார்ந்த வர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ்: சுங்கக் கட்டணம், காப்பீடு தொகை, உதிரிபாகங்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலையும் உயர்வதால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவேதான், தமிழகத்தில் ஓடும் சுமார் 4 லட்சம் சரக்கு லாரிகளுக்கும் வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளோம்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா வில் ரூ.2 முதல் ரூ.4 வரை டீசல் விலையை குறைத்துள்ளனர். எனவே, அங்கு வாடகையை உயர்த்தவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் உயர்த்தியுள்ளோம்.
தொடர்ந்து டீசல் விலை உயர்ந் தால், வாடகை கட்டணத்தை நாங் கள் மேலும் 10 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
பொருட்கள் விலை 5% உயரும்
பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஆர்.பாலசுப்பிர மணியன்: மத்திய கலால் வரி, மாநில வாட் வரிகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வரி களைக் குறைத்தால் லிட்டருக்கு ரூ.40 வரை குறைக்க முடியும்.
கடந்த ஒன்றரை மாதத்தில் பெட் ரோல் லிட்டருக்கு ரூ.5. டீசல் லிட்ட ருக்கு ரூ.5.87 உயர்ந்துள்ளது. 90 சத வீத சரக்குகள் சாலை போக்கு வரத்து மூலமாகவே கொண்டுவரப் படுகின்றன. இதனால், போக்கு வரத்து செலவு உயர்ந்துள்ளது. லாரி வாடகையும் உயர்த்தப் பட்டுள்ளதால் காய்கறி, பழங் கள், உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை 2 முதல் 5 சதவீதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும்.
பொருளியல் பேராசிரியர் மாரி யப்பன்: உற்பத்தியாகும் பொருட் களின் விலை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போது மாறுபடுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் செலவு அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும். அதில் சிறந்த பரிந் துரைகளை அமல்படுத்தி, ஆக்கப் பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
சிறு, குறு தொழில்களில் உற் பத்திக்கு பயன்படும் இயந்திரங் களில் பெரும்பாலும் டீசலே எரி பொருளாக உள்ளது. டீசல் விலை உயர்வால், அவர்களது உற் பத்தி செலவு 10 சதவீதம் அதிகரிக் கும். இந்த செலவோடு மற்ற செலவு களும் சேரும்போது, உற்பத்திப் பொருளின் அடக்கவிலை மேலும் அதிகரிக்கும்.
மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் பெட்ரோல், டீசலை சேர்த்து மத்திய அரசு இதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பயோ காஸ், பேட்டரி, சோலார் போன்ற மாற்று எரிசக்தி வாகனங் களின் உற்பத்தி, பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிகளைக் குறைத்தாலே, 30 சதவீதம் வரை விலையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago