மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; உயர் நீதிமன்றம் திட்டவட்டம்: தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டங்களையும் அனுமதிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதையடுத்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தமிழக காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, மெரினாவில் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து மெரினா கடற்கரையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தார்மீகப் பிரச்சினையை வலியுறுத்திதான் அனுமதி கேட்கிறோம். அறவழியிலேயே போராட்டம் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, “மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டுக்குப் பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை” என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி டி.ராஜா, “ஒருவருக்கு அனுமதி கொடுத்தால் என்ன? நிபந்தனையுடன் அனுமதி வழங்கி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், மெரினா கடற்கரையில் போராட தமிழக காவல்துறை விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் உத்தரவிட்ட மறுநாளே அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரண், ஆர். சுப்பிரமணியன், “ஏற்கெனவே தமிழக அரசு போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஒருவருக்கு அனுமதியளித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதுதான்'' என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் கே.கே.சசிதரண், ஆர். சுப்பிரமணியன், “மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போதைய சூழலில் அங்கு போராட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என சுட்டிக் காட்டியிருக்கின்றனர். எனவே, மெரினாவில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மெரினாவில் போலீஸார் பாதுகாப்புடன் போராட்டம் நடத்தலாம் என்று தனி நீதிபதி அளித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்