கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த சுய உதவிக்குழு பெண்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

By பெ.ஜேம்ஸ்குமார்

கிராம பஞ்சாயத்துகளில் வேலை வாய்ப்பற்ற நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், பொருளா தார ரீதியாக அவர்களை மேம் படுத்தவும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மண் புழு உரம் உற் பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் நடைபெற்று வரு கின்றன.

இதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மண் புழு உரம் உற்பத்தி செய்யும் வகையில், பல கிராம ஊராட்சி களில் இயற்கை உரம் உற்பத்தி செய்ய குடில்கள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும் ஊராட்சி பகுதியில் இருந்து சேகரமாகும் குப்பையிலிருந்து மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் மகளிர் சுய உதவிக்குழு. இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில், ஏராளமான பெண்கள் பொரு ளாதார ரீதியாக, மேம்பாடு அடைந் துள்ளனர்.

தற்போது இதன் ஒரு பகுதி யாக மகளிர் சுய உதவிக் குழுக் களில் உள்ள பெண்களுக்குள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகி றது. மண்புழு உரம் தயாரிப்ப தற்காக உருவாக்கப்பட்ட தனிக் குழுக்களுக்கு தலைவர், செயலர் மற்றும் 5-க்கும் மேற்பட்ட உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு வருகின்ற னர். இவர்களுக்கென தனியாக வங்கிக் கணக்கும் தொடங்கப்படு கிறது. மண்புழு உரம் உற்பத்தி செய்து விற்பனை செய்வதோடு, ஊராட்சி பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு அருகிலேயே காய்கறி தோட்டங் கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரம் மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம், கிராம பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பயிற்சி முறை

இப்பயிற்சியில் மண்புழு உரம் தயாரிக்கும் இடம் தேர்வு, மண்புழுவைத் தேர்வு செய்தல், தொட்டி முறை மற்றும் குவியல் முறையில் மண்புழு உரம் தயாரித்தல், பயிர் கழிவுகள், நகரக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல், ஒவ்வொரு வேளாண் பயிர்களுக்கும் மண்புழு உரப் பரிந்துரை அளவு, மண்புழு உரத்தின் நன்மைகள், மேலும் வெர்மிவாஸ் (மண்புழு ஊட்ட நீர்) தயார் செய்யும் முறை, அதனை பயிர்களுக்கு தெளிக்கும் அளவு பற்றிய தலைப்புகளில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும் என் றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்